செய்திகள் :

ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் உள்ள இரட்டை இலை சின்னம்... வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரம்!

post image

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் உடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.

திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் உள்ள கேட்டில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவில்  சேர்ந்ததையடுத்து கேட்டில் பொறிக்கபட்டிருந்த  இரட்டை இலை சின்னத்தை வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் கார்

மேலும் வீட்டின் சுவர்களில் அதிமுகவின் சின்னம் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை சிகப்பு  வண்ணத்தில் உள்ள பெயிண்டுகள் அழிக்கப்பட்டு திமுகவின் சின்னத்தில் உள்ள கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம்

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.தொழில் வளர்ச்சி, மகளிர் நலன், மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சி, ஆதிதிராவிட பழங்குடிய... மேலும் பார்க்க

அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகண... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா அமைச்சர் கூட்டிய கூட்டம்; "பங்கேற்க முடியாது" - மெசேஜ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார்.மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்... மேலும் பார்க்க

ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தள... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்க... மேலும் பார்க்க

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' - ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் க... மேலும் பார்க்க