செய்திகள் :

Rishab Shetty: "உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன!" - மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி

post image

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகதியின் சிறுவயது புகைப்படங்கள் முதல், ஒரு தாயாக, ஒரு தொழில்முறை கலைஞராக அவர் பரிணமித்த தருணங்கள் வரை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரிஷப் ஷெட்டி - பிரகதி ஷெட்டி
ரிஷப் ஷெட்டி - பிரகதி ஷெட்டி

அதில் கன்னடத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ``உன்னிடமுள்ள அபூர்வமான மன உறுதி, தாய்மையின் அன்பு, தொழிலில் காட்டும் கவனம் மற்றும் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாளும் விதம் என்னை எப்போதும் வியக்க வைக்கின்றன.

இந்த வண்ணமயமான வாழ்க்கையில் ஒரு ஒளியாகத் திகழும் நீ, இன்னும் பல வெற்றிகளையும் புகழையும் பெற வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகதி!" எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி மற்றும் பிரகதி ஷெட்டி இருவரும் ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து காதல் வயப்பட்டனர். இருப்பினும், அந்தச் சமயத்தில் ரிஷப் ஷெட்டியின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது.

அதனால் பிரகதியின் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தயங்கினர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, 2017-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ரன்வித் என்ற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர்.

மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரகதி, பின்னர் ஆடை வடிவமைப்பாளராக மாறி ரிஷப் ஷெட்டியின் படங்களுக்குப் பணியாற்றத் தொடங்கினார்.

சமீபத்தில் 2025-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'காந்தாரா சாப்டர் 1' (Kantara Chapter: 1) படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

"அன்பை லாரியில் அனுப்புகிறோம்" - ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி

நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புத... மேலும் பார்க்க

"இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!"; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்... மேலும் பார்க்க

'உண்மையான அன்பை எனக்கு காட்டியவர்.!'- ராஷ்மிகாவை கரம்பிடித்த விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று (பிப். 26) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்' திரைப்... மேலும் பார்க்க

`என் இதயம் நிறைந்திருக்கிறது!' - கர்ப்ப கால நினைவுகளைப் பகிர்ந்த ராம் சரணின் மனைவி உபாசனா!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகன் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஏற்கெனவே கிளின் காரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், மீண... மேலும் பார்க்க

Prakash Raj: சந்தீப் வாங்காவின் ‘Spirit’ படத்தில் இருந்து விலகுகிறேனா? நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து தான் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.அ... மேலும் பார்க்க

'ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை' - இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் - உபாசனா தம்பதி

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்... மேலும் பார்க்க