செய்திகள் :

Priyanka Mohan: "யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?" - பிரியங்கா மோகன் சொன்ன பதில் என்ன?

post image

சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது.

நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், 'வடசென்னை 2' படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன், இந்நிகழ்வில் நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை எனவும் தெரிவித்திருக்கிறார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், "கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது. லாஸ்ட் பெஞ்சும் கிடையாது.

தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன்.

அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன்" என்றார்.

அவரிடம், "யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் தந்தவர், "நடிகை சௌந்தர்யா மேமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை" என்றார்.

மேட் இன் கொரியா படத்தில்...
மேட் இன் கொரியா படத்தில்...

பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

"என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ்

தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்....தனுஷ்திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் ... மேலும் பார்க்க

வீசும் வெளிச்சத்திலே: "40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி !" - மதன் கார்க்கி | வரித்துணையே 5

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

"நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!"- மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா நீங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. விஜய்அதற்கு பதிலளித்... மேலும் பார்க்க

தாய் கிழவி: "மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!"- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்க... மேலும் பார்க்க

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?

கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார்.படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளை... மேலும் பார்க்க