செய்திகள் :

ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.

அயதுல்லா அலி கமேனி
அயதுல்லா அலி கமேனி

இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகண... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா அமைச்சர் கூட்டிய கூட்டம்; "பங்கேற்க முடியாது" - மெசேஜ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார்.மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்க... மேலும் பார்க்க

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' - ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் க... மேலும் பார்க்க

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்கு... மேலும் பார்க்க

”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும... மேலும் பார்க்க