செய்திகள் :

சமையல் சூப்பர் ஸ்டார்; கருப்பட்டி பால்கோவா, பனீர் ஆம்லெட் - கலக்கிய மதுரை போட்டியாளர்கள்!

post image

சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் - சீசன் 3 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 28-ம் தேதி சனிக்கிழமை மதுரையில் போட்டி நடைபெற்றது. மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 138 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மதுரையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி

தாங்கள் சமைத்துக் கொண்டு வந்திருந்த உணவுகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்த, அதை சுவை பார்த்து அடுத்த சுற்றுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்தார் செஃப் தீனா. ராகி அல்வா, இளநீர் புட்டிங், சுண்டைக்காய் பிரியாணி, நார்த்தங்காய் மண்டி, சிறுதானிய லட்டு, இலந்தை அல்வா, சாமை எக் ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் போட்டியில் இடம்பெற்றன.

சுவை, செய்முறை மற்றும் டிஸ்பிளே ஆகியவற்றின் அடிப்படையில், தனலெட்சுமி, சரோஜினி, மகேஷ்வரி, அமளி ஜாஸ்மின், கார்த்திகா லெட்சுமி, கௌதமி, அனன்யா, தமிழரசன், பாத்திமா மற்றும் நித்யா ஆகிய10 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்வாகினர்.

மதுரையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி

இரண்டாம் சுற்றான நேரடி சமையல் சுற்றில், போட்டியாளர்கள் பங்கேற்று பல்வேறு விதமான உணவுகளை சமைத்தனர்.

இதனையடுத்து, கீரை காய் சாதம், பருப்புத் துவையல் உள்ளிட்டவற்றைச் சமைத்த நித்யா,சக்கரைவள்ளிக் கிழங்கு குளோப் ஜாமூன், பனீர் ஆம்லெட் சமைத்த பாத்திமா மற்றும் கருப்பட்டி பால்கோவா, வாழை இலை நீர்மோர் தயாரித்த செய்த சரண்யா ஆகிய மூவரும் வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.

இவர்கள் சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள். இதுதவிர, ஒரு போட்டியாளர் சர்ப்ரைஸாக தேர்வு வைல்கார்ட் என்ட்ரியாக தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்.

மதுரையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி

நேரடி சமையல் சுற்றில் பங்கேற்ற மீதம் ஏழு பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்ததாக, திருநெல்வேலியில் ஞாயிற்றுககிழமை (மார்ச் 1) போட்டி நடைபெறும்.

மதுரை: சீனி அவரைக்காய் அல்வா டு சுண்டைக்காய் பிரியாணி; சுவையால் மிரளவைத்த 'சமையல் சூப்பர் ஸ்டார்'

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆ... மேலும் பார்க்க

'சங்குப்பூ கொழுக்கட்டை, நரிபயிறு சாலட், திக்குடி ஆட்டுக்கால் கிரேவி' சேலத்தில் சமையல் சூப்பர் ஸ்டார்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அவள் விகடன், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர் ஆகியவை இணைந்து வழங்கும் “உங்கள் சமையல் திறமைக்க... மேலும் பார்க்க

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: Live Cooking இல் கலக்கிய போட்டியாளர்கள்; இறுதிச்சுற்றில் மூவர்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம்ஆக... மேலும் பார்க்க

`குதிரைவாலி களி, நாட்டுக்கோழி பெப்பர் கறி...’ - வேலூரில் கமகமத்த அவள் விகடன் சமையல் போட்டி

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆ... மேலும் பார்க்க