செய்திகள் :

ஈரானுக்கு ரஷ்யா உதவுகிறதா? "நேரடியாக புதினிடமே கேட்பேன்" - உக்ரைனின் குற்றச்சாட்டு குறித்து ட்ரம்ப்

post image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "வான்வெளி புகைப்படங்களை அனுப்பி ஈரானுக்கு ரஷ்யா போரில் உதவுகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஜெலன்ஸ்கியின் கூற்று குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரது பதில்...

"அது உண்மையா என்று நாம் தெரிந்துகொள்வோம். நான் புதினிடமே இதைப் பற்றி நேரடியாகக் கேட்பேன். உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

ஆனால், அது (உண்மையென்றாலும்) பெரியளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் நாம் ஈரானை அடித்து நொறுக்கிவிட்டோம். ரஷ்யா, வெனிசுலாவிற்கு ஏராளமான ராணுவத் தளவாடங்களைக் கொடுத்தார்கள்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின்

வெனிசுலாவிடம் எல்லாமே ரஷ்யத் தயாரிப்புகளாகத்தான் இருந்தன. ஆனால் அதன் பலன் என்னவாக இருந்தது? பெரியளவில் பலனளிக்கவில்லை.

ஈரானுக்கும் ரஷ்யா ஆதரவு அளித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்திருந்தாலும் அது எந்தப் பலனையும் தரவில்லை. ஏனென்றால், ஈரானிடம் ராணுவமும் இல்லை, விமானப்படையும் இல்லை, கடற்படையும் இல்லை, எதுவுமே இல்லை.

ரஷ்யா அப்படிச் செய்கிறது என்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாகப் பெரியளவில் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே செய்திருந்தாலும், அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை"

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க