செய்திகள் :

"ஈரானைக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்; அதனால், பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள்" - ட்ரம்ப் பேச்சு

post image

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, கடுமையாக மோதிக்கொண்ட அமெரிக்காவும், ஈரானும் மூன்று நாள்களாகத் தாக்குதல்களை நிறுத்தியிருக்கின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதால்தான் இந்தப் போர் நிறுத்தம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நேரத்தில் ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கையில், "நாம் அவர்களின் ராணுவத்தை ஏறக்குறைய அழித்துவிட்டோம்.

அவர்கள் நம்மைச் சந்திக்க விரும்புகிறார்கள், நாமும் சந்திக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஈரான் போர்
ஈரான் போர்

ஓர் உடன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் நேரடியாகவும் சந்திப்பைக் கோரினார்கள். நாமும் சந்திக்கிறோம்.

நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். நாம் மோசமாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் இந்தச் சந்திப்பைக் கோரியிருக்க மாட்டார்கள். நாம் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கி வருவதால் மட்டுமே அவர்கள் நம்மைச் சந்திக்க விரும்புகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பும் பல முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது. இருந்தும், இரு தரப்பிற்கும் மோதல் உண்டானது. இந்த முறையாவது பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்தத்தில் சென்று முடிகிறதா என்பதை பார்ப்போம்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க