செய்திகள் :

ஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்!

post image

இந்தியாவில் நடந்த கடற்பயிற்சிக்காக வந்த... கிட்டத்தட்ட இந்தியாவிற்கு அருகே உள்ள கடற்பகுதியில் (இலங்கை கடற்பரப்பில்) ஈரான் கப்பலான IRIS தேனாவை மூழ்கடித்துள்ளது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஆனால், இது குறித்து மத்திய அரசு இதுவரை வாயே திறக்கவே இல்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது...

``1. இந்தியாவின் விருந்தாளியான ஈரான் கப்பல் இங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதற்கு ஏதேனும் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி அமைதியாகவே இருக்கிறார்.

IRIS Dena
IRIS Dena

சொந்த கொல்லைப்புறத்தில் நடக்கும் ஒரு விஷயத்திற்கு எதிர்வினையாற்றாதபோது, MAHASAGAR பற்றியும், இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு வழங்குநராக இருக்கிறீர்கள் என்றும் ஏன் பாடம் எடுக்கிறீர்கள்?

2. 1,100 மாலுமிகளுடன் இந்தியாவின் கொடி கொண்ட 38 வணிகக் கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ளன.

அங்கே கேப்டன் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட இரண்டு மாலுமிகள் இறந்துள்ளனர். அங்கே ஏன் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

இன்னும் 25 நாள்களுக்குத்தான் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.

எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களுடைய எரிசக்தித் திட்டம் என்ன? ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக ஒத்துக்கொண்டுள்ள இந்த வேளையில் என்ன திட்டம்?

வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் முக்கியப் பொருள்கள் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

3. வெளியுறவுத் துறையின் மார்ச் 3, 2026 அறிக்கையின் படி, 'சில இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்... சிலர் காணாமல் போய் உள்ளனர்.'

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள்.

உதவி கேட்டு மருத்துவ மாணவர்கள் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை இந்திய அரசு எப்படி பாதுகாக்கிறது? அவர்களை மீட்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா?

மோடி ஜி அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் சரணடைந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இது இந்தியாவின் நலனை குழைக்கிறது. பல ஆண்டுகளாகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதித்துள்ளது."

“நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்”- எப்படிச் சமாளிக்கப் போகிறது திமுக?

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்த தி.மு.க-வுக்கு அடுத்த சிக்கல் பிற கூட்டணிக் கட்சிகளால் துவங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் இடங்களை விட்டுக் கொடுத்ததுபோல தங்களுக்கும் கூடுதல் தொகுதி... மேலும் பார்க்க

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நில... மேலும் பார்க்க

'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின்

முறிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்றி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூட்டணியை கட்டிக் காக்கும் விதம் மெச்சத்தகுந்தது என அரசியல் விமர்சகர்களே பாராட்டுகின்றன... மேலும் பார்க்க

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல... மேலும் பார்க்க

கர்னாடிக் சிங்கர், ஹாக்கி ப்ளேயர், 'உம்மன் சாண்டி'யின் சிஷ்யன்! - யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரஸ் தலைமையின் சாய்ஸ் கிறிஸ்டோபர் திலக்காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைப்பு... நாளைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யணும் உடனடியா நீங்க சென்னைக்கு கிளம்பி வரணும்,சுற்றியிருந்த நண்பர்களே ஐதராபாத்திலிருந்... மேலும் பார்க்க

மகள் நிச்சயதார்த்தம்;திடீர் நோன்பு; சோடங்கர்! - கூட்டணியை முடிப்பதற்குள் செல்வப்பெருந்தகை பட்ட பாடு!

புகைச்சலிலேயே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு வழியாக சுமுகமான தீர்வை எட்டியிருக்கிறது. ஆனால், இந்த கூட்டணி இறுதியாவதற்குள் அதிகம் அல்லோலகலப்பட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ... மேலும் பார்க்க