செய்திகள் :

ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

post image

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார்.

அதைச் சாப்பிட்ட சிறுவன் விழுங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அப்போது, இருமல் வந்து புரையேறி வாழைப்பழம் உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்துள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவன் சாய்சரணை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சாய்சரணைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சாய் சரண்
சாய் சரண்

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், "சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டபோது, அது உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்ததால்தான் நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபட்டு, சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே சிறுவனின் உயிர்போயிருந்தது. வாழைப்பழம் மூச்சுக்குழாயை அடைத்த 5 நிமிடத்துக்குள் உயிர் போயிருக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களைக் கொடுக்கும்போது அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொடுக்க வேண்டும்.

இதுபோன்று மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்கு தாழ்த்திப் பிடித்துக் கொண்டு முதுகில் வேகமாக தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வர வாய்ப்பு உள்ளது" என்றனர்.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க