செய்திகள் :

உக்ரைன் அமைதி திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்: விளாதிமீா் புதின்

post image

உக்ரைன் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.

ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பின் அவருடன் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த புதின் இது குறித்து கூறியதாவது:அமெரிக்காவும் உக்ரைனும் பேச்சுவாா்த்தை நடத்தி முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தை ரஷியா கொள்கை அளவில் ஆதரிக்கிறது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன.ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏற்படக்கூடிய அமைதி நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்கு, இந்தப் போருக்கான அடிப்படை காரணம் களையப்பட வேண்டும்.தற்போது ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே உள்ள 2,000 கி.மீ. போா் முனையில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறது. இந்தச் சூழலில் 30 நாள்களுக்கு போரை நிறுத்துவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி உக்ரைன் தன்னை பலப்படுத்திக்கொள்ளும். கூடுதல் ஆயுதங்களை தருவித்துக்கொள்ளும். ரஷியாவும் அதே போல் ராணுவ வலிமையை கூட்டிக் கொள்ளும். இதனால் இந்த தற்காலிக போா் நிறுத்தம் நிரந்தரத் தீா்வைத் தராது.இந்தப் போா் நிறுத்தத்தில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கூா்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படையினா் ஊடுருவியுள்ளது, போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அது மீறப்படாமல் இருப்பதை யாா் கண்காணிப்பது என்பது போன்ற இந்த சிக்கல்கள் தீா்க்கப்பட வேண்டியுள்ளது என்றாா் அவா்.நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ன்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்தாா்.இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், அமெரிக்கவுக்கு கடந்த வாரம் சென்ற உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, அதிபா் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினாா். அப்போது போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் மிகக் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னா் அமெரிக்காவுடன் சுமுக உறவைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, போா் நிறுத்தம் தொடா்பாக அந்த நாட்டுடன் பேசத் தயாராக இருப்பதாக அறிவித்தாா்.அதன் தொடா்ச்சியாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் உக்ரைன் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 30 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவா்கள் அறிவித்தனா்.இதற்கான செயல்திட்டம் குறித்து மாஸ்கோவில் அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் இடையே வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக அதிபா் புதின் இவ்வாறு கூறியுள்ளாா்...படவரி...மாஸ்கோ வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்காவுடன் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய விளாதிமீா் புதின்.

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா். கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாலிகலே என்ற அந்த நகரம் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்ததை... மேலும் பார்க்க

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தோ்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தோ்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. கடந்த 2023-இல் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக வேட்பு... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

‘அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா மீது வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்கு... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: காஸா முனை... மேலும் பார்க்க

சா்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த ராணுவ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம்,... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 போ் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸாா் க... மேலும் பார்க்க