செய்திகள் :

'உங்கள் பாதம் ஆரோக்கியமாக இருக்கிறதா?' - கவனிக்க ஒரு கருத்தரங்கம் | பாதமே நலமா சீசன் 3

post image

உங்கள் உடலின் ஒரு பகுதி உங்களுக்குத் தெரியாமலே கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா?

ஆனால், இதுதான் கசப்பான உண்மை! சர்க்கரை நோய் (Diabetes) உள்ள 10-ல் 3 பேருக்கு, அவர்களின் கால்களில் இதுதான் சத்தமில்லாமல் நடக்கிறது.

ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கால்களின் நரம்புகளைப் பாதித்து மரத்துப்போகச் செய்கிறது. ஆரம்பத்தில் கால்களில் ஏற்படும் ஒரு சிறிய புண் அல்லது உராய்வு, வலி தெரியாததால் அலட்சியப்படுத்தப்பட்டு, கடைசியில் விரலையோ அல்லது காலையோ எடுக்க வேண்டிய ஆபத்தான நிலைக்குக் கொண்டு போய் விடுகிறது.

இந்த ஆபத்திலிருந்து உங்கள் கால்களைப் பாதுகாக்க ஒரு அரிய வாய்ப்பு.

பாதம்
பாதம்

ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து வழங்கும் 'பாதமே நலமா? Season 3' சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியாவின் முன்னணி பாத சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் கேசவன் மற்றும் பல மருத்துவ வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு, பாதப் பராமரிப்பு பற்றிய அத்தியாவசிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

உங்கள் சந்தேகங்களை மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவுபெறலாம். மேலும், பிரபல திரைக் கலைஞர் திரு. எஸ்.வி.சேகர் அவர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருக்கிறார்.

சென்னை மயிலாப்பூரிலுள்ள AIOBEU ஸ்வஸ்திகா திருமண ஹாலில் வரும் செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தொடங்குகிறது நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்! அதுமட்டுமின்றி, கலந்துகொள்ளும் அனைவருக்கும் ₹1,000 மதிப்புள்ள 'ஃபுட் கேர் கிட்' (Foot Care Kit) இலவசமாக வழங்கப்படும்.

இடங்கள் மிக மிகக் குறைவு என்பதால், உடனடியாக உங்கள் சீட்டை முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் வருகையைப் பதிவு செய்ய: https://events.vikatan.com/481-mega-diabetic-foot-public-awareness-meet/?fbclid=IwY2xjawT6XDhwZG9mBWV4dG4DYWVtAjEwAGJyaWQRMXFGTmZkczNram02MVM4dnZzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEevoEforKLHWtAW4UvgQeBMIQ2u2bjSHixVyKC13bETGAsSS45AhXvzXn2SMk_aem_IG0iNzByImUiDxo4YZA2dA


அல்லது, 

உடனே அழைக்கவும்: 044 - 66802980 / 07

ஒரு சிறு போன் கால்... உங்கள் பாதங்களின் ஆயுளைக் காப்பாற்றும்! இன்றே பதிவு செய்யுங்கள்!

Doctor Vikatan: வருடக்கணக்கில் சிகரெட் பழக்கம், பலமுறை தோல்வி... உறுதியாக கைவிட10 ஆலோசனைகள்!

Doctor Vikatan: நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக சிகரெட் பழக்கத்தில் சிக்கித் தவிக்கிறேன். அதை நிறுத்த பல முறை முயன்றும் என்னால் முடியவில்லை. சிகரெட் பழக்கத்தை அறவே நிறுத்த என்னதான் செய்வது?-dmurthy,விக... மேலும் பார்க்க

Doctor Vikatan: கையை உயர்த்தவே முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி... அறுவை சிகிச்சைதான் தீர்வா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறான். மருத்துவர்களைப் பார்த்து வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில... மேலும் பார்க்க

Doctor Vikatan: பஞ்சங்களால் மாறிய மரபணுக்கள்; ஆரோக்கியமான இளைஞர்களுக்கும் மாரடைப்பு - இதுவா காரணம்?

Doctor Vikatan: கடந்த காலங்களில் இள வயது மாரடைப்புகளும் மரணங்களும் அதிகரித்து வருவதைக் கேள்விப்படுகிறோம்.இவற்றுக்கெல்லாம் நம் மூதாதையர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு விரல்களை வெட்டி அகற்றுவது ஏன்?

Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 60 வயதாகிறது. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களில் அவருக்கு கால்களில் ஒவ்வொரு விரலாக வெட்டி எடுத்துவிட்டார்கள்.... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி ஷவர்மா சாப்பிடும் பிள்ளைகள்... வெஜிடேரியன் ஷவர்மா ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: என் மகனுக்கு 23 வயதாகிறது. அவன் வாரத்துக்கு 3-4 நாள்கள் ஷவர்மா சாப்பிடுகிறான். இது அவனது ஆரோக்கியத்தை பாதிக்குமா... வெஜிட்டேரியன் ஷவர்மா சாப்பிடலாம், அது ஆரோக்கியமானதுதான் என்கிறார்கள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இனி வாரம் ஒருமுறை ஊசி போட்டால் போதும்; இன்சுலின் போடுவோருக்கு குட் நியூஸ்!

Doctor Vikatan: என் வயது 52. கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய்க்கு இன்சுலின் போட்டுக்கொண்டிருக்கிறேன். தினமும் ஊசி குத்திக்கொள்வது வலியைத் தருகிறது. தவிர, சில நாள்களில் மறந்துவிடுகிறேன். இந்நிலையில்தான் ... மேலும் பார்க்க