செய்திகள் :

``உங்கள் மைக் மட்டும்தான் வேலை செய்யாமல் போகிறது" - ராகுல் குற்றச்சாட்டும் சபாநாயகர் பதிலும்!

post image

பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைத் திருத்துவதற்கும், தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைப்பதற்கும் வழிவகுக்கும் அரசியலமைப்பு (131-வது) திருத்த மசோதா 2026', 'எல்லை நிர்ணய மசோதா 2026' மற்றும் 'யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2026' ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காரசாரமான வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

வேணுகோபால்
வேணுகோபால்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, ​​அவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான முன்மொழிவின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் குறித்து வேணுகோபால் கேள்விகளை எழுப்பி, ``பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தருவது நல்லதுதான். ஆனால், அதை ஏன் உடனே (அதாவது 2024 மக்களவைத் தேர்தலிலேயே) அமல்படுத்தவில்லை? தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை ஏன் காத்திருக்க வேண்டும்?" என வினவினார்.

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுந்து, ``இந்த மசோதா இன்னும் முறைப்படி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இப்போதுதான் அறிமுகம் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும்போது, விவாதத்திற்கு வராத ஒரு மசோதாவின் உள்ளடக்கம் மற்றும் காலக்கெடு குறித்து இப்போது எப்படி கேள்வி கேட்க முடியும்?" என ஆட்சேபனை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர், வேணுகோபாலிடம் அவையின் நடைமுறைகளை விளக்கத் தொடங்கியபோது, ​​எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஒருவர் 'முதலில் அந்த எம்.பி-யின் மைக் இயங்குகிறதா?' எனச் சந்தேகம் எழுப்பினார்.

ராகுல் காந்தி - ஓம் பிர்லா

மற்றொரு எம்.பி "மைக் அணைக்கப்பட்டிருக்கிறது" என்றார். ராகுல் காந்தியும் மைக்கைச் சுட்டிக்காட்டி, "மைக் வேலை செய்யவில்லை," என்றார். அப்போது மக்களவை சபாநாயகர் நகைச்சுவையாக, "மைக் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் மைக் மட்டும்தான் வேலை செய்யாமல் போகிறது," என்று பதிலளித்தார்.

இந்த உரையாடலின் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது அவர்களின் மைக் அணைக்கப்படுவதாக ராகுல் காந்தி முன்னதாகக் கூறிய குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது.

"பல்லாவரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" - தவெக வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் உறுதி

பல்லாவரம் அரசியல் களம் இந்த முறை சற்றே வித்தியாசமாகக் காட்சி தருகிறது. காரணம், புதிய முகம், ஆனால் பழைய சமூகப் பணியின் அடையாளம். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் காமாட்சி ஜெயகி... மேலும் பார்க்க

`தேர்தல் ஆணையத்திடம் பொறுப்பு இருக்கிறதுதான்; ஆனால், எங்கள் பிரசாரத்தை தடுப்பது திமுக'- விஜய் கடிதம்

தங்களுடைய தேர்தல் பிரசாரங்களுக்கு நெருக்கடி தருவதாக தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது..."தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துக... மேலும் பார்க்க

ரூ.25,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டம்... கோவையைக் கலக்கும் செந்தில் பாலாஜி!

கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்ற பிம்பத்தைச் சுக்கு நூறாக உடைத்திருக்கிறது செந்தில்பாலாஜியின் கோவை எண்ட்ரி. கோவை முழுக்க அவருக்குக் கிடைக்கும் மக்கள் வரவேற்பு அதிமுகவைக் கதிகலங்க வைத்திருக்கிறது... மேலும் பார்க்க

TVK: "அவதூறுகளால் என்னை முடக்க முடியாது" - ஆர்.கே. நகர் தவெக வேட்பாளர் மரியவில்சன் பேட்டி

2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆர்.கே.நகர் த.வெ.க வேட்பாளர் மரியவில்சன் அத்தொகுதி மக்களுக்கு ஏராளனமான வாக்குறுதிகளை அளித்து கவனம் ஈர்த்து வருகிறார். இன்னொருபுறம், அவர்... மேலும் பார்க்க

''போதைப்பொருட்களை ஒழிப்பதே என் லட்சியம்'' - ‘சென்னை’ அமைச்சரின் கோட்டையைச் சரிப்பாரா இளைஞர் யுவராஜா?

ஈரோடு மேற்குத் தொகுதி இப்போது வெறும் தேர்தல் களம் மட்டுமல்ல; ஒரு பெரும் அரசியல் சதுரங்கம். ஒருபுறம் ஆளுங்கட்சியின் அதிகார பலம், மறுபுறம் 'ஈரோட்டு காமராஜரின்' பேரன் எனப் பாரம்பர்யப் பின்னணி கொண்ட எம்.ய... மேலும் பார்க்க