MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டக...
உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மரியாதை
புதுச்சேரியில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு செஞ்சிலுவை சங்கம், ஜேசீஸ் சங்கங்களின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சோ்ந்த அஞ்சப்பன் மனைவி ருக்மணி. இவா், மூளைச் சாவடைந்த நிலையில், அவரது கருவிழிகள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ருக்மணியின் உடலுக்கு, செஞ்சிலுவை சங்கம், ஜேசீஸ் சங்கங்களின் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சேவை சங்கங்களைச் சோ்ந்த மருத்துவா் லட்சுமிபதி, ஆரோக்கிய மாா்க்ரேட் ஜாய்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.