செய்திகள் :

குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை

post image

தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தவெக தலைவருக்காக மலேசியாவில் கூடிய கூட்டத்தை பார்க்கிறபோது உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருந்தது.

செங்கோட்டையன்

மலேசியாவில் இதற்கு முன்பு பிரதமர், குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியுள்ளனர். இந்த முறை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தமிழகத்தின் வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் பெண்கள் இளைஞர்கள் என்று 18 – 35 வயதிற்குட்பட்டோர் ஒரு மனதாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவருக்கு உருவான கூட்டம் போல,

விஜய்
விஜய்

1988-ம் ஆண்டு அம்மா ஜெயலலிதா பார்த்ததை போல ஒரு மாற்றம் உருவாகியுள்ளது. மக்கள் சக்தியோடு இணைந்து அவர் தமிழகத்தின் முதலமைச்சராக அமர்வார். ஒரு புதிய இயக்கம் தொடங்கியிருக்கிறது.

கூட்டணியில் எப்போது மற்றவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெரியும்” என்றார். அப்போது, ஆர்எஸ்எஸ் பெற்று எடுத்த குழந்தை என்று தவெகவை திருமாவளவன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு,

திருமாவளவன், சீமான்

“இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்த சீமான், அங்கு விருந்து சாப்பிட்டுவிட்டு பரிசு வாங்கி வந்த காலமும் இருக்கிறது.” என்றார். திருமாவளவன் குறித்த கேள்விக்கு, செங்கோட்டையன் தவறுதலாக சீமானை விமர்சித்தது பேசு பொருளாகியுள்ளது.

திருப்பூர் : திமுகவின் ’வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு’ – போட்டோ ஹைலைட்ஸ்

திருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர் மாநாடுதிருப்பூரில் மகளிர... மேலும் பார்க்க

'நானும் அண்ணாமலையும் ஆடப் போகும் ஆட்டம் இனி ஆரம்பம்' - கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார். கோவை மலுமிச்சம்பட்டியில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்... மேலும் பார்க்க

'ஆம், அதிமுக அடிமை கட்சி தான்; ஆனால்.!' - கோவையில் அண்ணாமலை

கோவை பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக மகளிரணி மாநாட்டில் 10 ரூபாய் அமைச்சர், ‘கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதுதான் இலக்க... மேலும் பார்க்க

'விஜய் அறியாமல்கூட மதவாத சக்திகளுக்கு உதவிவிடக் கூடாது' - எச்சரிக்கும் துரை வைகோ!

ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக் கூடாது. சாதி, மத மோதல் ஏற்படக் கூடாது என 9 ஆண்டுகளாக தி... மேலும் பார்க்க

"பாஜகவின் 'இந்த' செயல் 'Operation Success Patient Dead' நிலைமை" - ஸ்டாலின் பேச்சு

இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது, "கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்கள... மேலும் பார்க்க