செய்திகள் :

`உடைந்தது திமுக கூட்டணி' - தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு! - என்னென்ன நிபந்தனைகள்?

post image

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய், ராகுல் காந்தி
விஜய், ராகுல் காந்தி

இந்நிலையில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில்,

``தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழகத்தில் அரசு அமைப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸின் (INC) ஆதரவை நாடி அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட ஒரு மதசார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசுக்காக மிகத் தெளிவான, வலுவான மற்றும் பரவலான ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அடுத்த அரசை அமைக்க திரு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவில் மதசார்பற்ற, முற்போக்கான மற்றும் நலன்புரி அரசியலின் நிறுவன கட்சியாக விளங்குகிறது; அதற்காகவே போராடுகிறது. தமிழக மக்களின் இந்த ஆணையை மதிக்கவும், நிலைநிறுத்தவும், நிறைவேற்றவும் உதவுவது நமது அரசியலமைப்பு கடமை. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP) தவெக அரசு அமைப்பதற்கு தங்களின் முழு ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளன.

இந்தியாவின் அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத எந்த வகுப்புவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியிலிருந்து தவெக விலக்கி வைக்க வேண்டும் என்பதே எங்கள் ஆதரவுக்கான நிபந்தனை.

தவெகவும் தமிழ்நாடு காங்கிரஸும் இணைந்த இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதி இலட்சியங்களுக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு இலட்சியங்களுக்கும் உறுதியான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பெருமை மிகு தமிழகத்தை மீண்டும் கொண்டுவர உறுதிபூண்டிருக்கிறது.

பரஸ்பர மரியாதை, தகுந்த பங்கு மற்றும் பகிர்ந்த பொறுப்புணர்வின் அடிப்படையில் உருவான இந்தக் கூட்டணி, இந்த அரசை அமைப்பதற்கு மட்டுமல்ல — உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களிலும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதற்கானது.

தமிழக மக்கள் வழங்கிய இந்த வரலாற்று ஆணையை மதிக்கவும், மதசார்பற்ற முற்போக்கு அரசை நிறுவிட உறுதிப்படுத்திக்கொள்ளவும், மக்களின் குறிப்பாக தமிழக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும் திரு விஜய்யும் திரு ராகுல் காந்தியும் இணைந்து உறுதிமொழி எடுக்கிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்,

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க