செய்திகள் :

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' - இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

post image

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை பெற்றிருக்கிறது தி.மு.க. இடைத்தேர்தல் களத்தில் அக்கட்சி பயன்படுத்திய புது பார்முலா குறித்து விசாரித்தோம்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

நடந்துமுடிந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெ.க வெற்றிபெற்ற நிலையில் மதுராந்தகம் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 53,463 வாக்குகளும், தாராபுரம் தி.மு.க வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளும் பெற்றுள்ளனர். இரண்டு தொகுதியுமே அ.தி.மு.க பலமான தொகுதி என்பதால் தி.மு.க மூன்றாமிடத்துக்கு தள்ளப்படும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் த.வெ.க, அ.தி.மு.க தரப்பு ஷாக் கொடுத்து கவனிக்கத்தக்க வாக்குகளை பெற்றுள்ளனர்.

தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம் "தமிழக அரசியல் களம் 'விஜய் Vs உதய்' என மாறியதிலிருந்து தி.மு.க-வில் உதயநிதியின் கை ஓங்கிவிட்டது. தேர்தல் அறிவிக்கபட்டவுடன் 'த.வெ.க-வுக்கு மக்கள் மத்தியில் இன்னும் மாஸ் குறையவில்லை. மதுராந்தகம், தாராபுரம் இரண்டு அ.தி.மு.க வென்ற தொகுதி என்பதால் நாம் தேர்தலை புறக்கணிப்போம். த.வெ.க ஒரு தொகுதியில் தோற்றால்கூட போதும்' என்பதுதான் சீனியர்களின் வாதம். சீனியர்கள் முடிவை மறுத்த உதயநிதி ஸ்டாலின், 'தேர்தலை புறக்கணிப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. பயந்து ஓடிவிட்டோம் என விமர்சிப்பார்கள்' என புறக்கணிக்கும் முடிவை மொத்தமாக மறுத்தார்.

பரந்தாமன், உதயநிதி ஸ்டாலின்

அதோடு உதயநிதி நிற்கவில்லை, 'இரண்டு தொகுதியையும் வெல்வது என்னுடைய பொறுப்பு எனச் சொல்லி வேட்பாளர் தேர்விலும் அவரே முழு அதிகாரத்தை செலுத்தினார். முதல்வர் விஜய்க்கு தக்க பாடம்புகட்ட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார் உதய். களத்தில் அந்த ஈகோ மோதல் எதிரொலித்தன. இளைஞரணி நிர்வாகிகள் களத்தில் தீவிரம் காட்டினார்கள்" என்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள் "பரந்தாமன் தொகுதிக்குச் சம்பந்தமில்லாதவர் என்பதால் நகர, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் களப்பணி செய்யும் ஆர்வம் குறைவாகவே இருந்தது. மதுராந்தகத்தில் த.வெ.க வெற்றிபெறும், தாராபுரத்தில் தி.மு.க வெற்றிபெறும் என முன்முடிவோடு அசால்ட் காட்டினார்கள். மதுராந்தகத்தில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தாராபுரத்தில் சக்கரபாணி, செந்தில் பாலாஜி ஆகியோர் நீங்களாக மற்றவர் கடமைக்குத்தான் தொகுதியை சுற்றிவந்தனர். சீனியர்களை நம்பினால் கதைக்கு ஆகாது என கணக்குப்போட்டு இளைஞரணி டீமை ஒன்றை களமிறக்கினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

9 இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர்கள், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள். மாவட்ட துணைச் செயலாளர் என இரண்டு தொகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகள் 750 பேர் பணியாற்றினர். 'விஜய் உருவாக்கி வைத்திருக்கும் போலி பிம்பத்தை உடைக்க வேண்டும்' என வீடு வீடாக பிரசாரம் செய்யும் வகையில் '1 பூத்துக்கு 10 யூத்' என்கிற அடிப்படையில் பகுதிகளை பிரித்துக் கொண்டு பணியாற்றினோம்.

ஒருபக்கம் முன்னாள் அமைச்சர்களின் டீம், மறுபக்கம் இளைஞரணி டீம் என தீவிரம் காட்டியது தி.மு.க. ஆகையால்தான் நெருக்கடிக்கு மத்தியிலும் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன" என்றனர்.

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர் "பணம் கொடுக்கும் பார்முலா, பட்டி அமைக்கும் பார்முலா, டோக்கன் கொடுக்கும் பார்முலா என எதனையும் பின்பற்றாலும் களப் பணியாற்றினால் போதும் என்ற முடிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே வந்ததுதான் இந்த இடைத்தேர்தலின் சிறப்பு. த.வெ.க சார்பில் இளம் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் பணியாற்றினார். தி.மு.க சார்பில் உதயநிதி இளைஞரணியும் தி.மு.க தலைவரின் முன்னாள் அமைச்சர்கள் படையும் பணியாற்றியது. தமிழக அரசியல் களம் விஜய் Vs உதய் என்றே நகரக்கூடும்" என்றனர். 

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனச் சி.ஜே.பி-யினர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் சி.... மேலும் பார்க்க

`சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: இப்போது தேவைதானா?' - உயர் கல்வித்துறையின் சிக்கல்கள்| ஓர் அலசல்

University of Western Australiaதமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக் கழகமாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்துக்கு, UGC ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின், 'குரூப் ஆப் எய்... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் சட்டவிரோதமாக செயல்படுகிறதா குவாரி? எஸ்பி ஆய்வு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்தக் கல்குவாரியில் இர... மேலும் பார்க்க

'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' - தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில் த.வெ.க வளர்ச்சியை தடுக்க மீனவ சமூகத்தினருக்கு கட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் ... மேலும் பார்க்க

'5 மாதங்களாக தமிழ்நாட்டின் GST வசூல் இறங்கு முகம்' - நிபுணர் கூறும் பொருளாதாரக் காரணம் என்ன?

கடந்த மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மைனஸ் என்கிற கேள்வி எழுவது நியாயமானதே. இந்த வசூல் குறைவிற்கு ஆட்சி மாற்றம் போன்ற அரசியல் காரணங... மேலும் பார்க்க

மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.... மேலும் பார்க்க