செய்திகள் :

``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்

post image

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். தொழிற்சாலைக் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம், தொழிற்சாலையைத் திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ``நம்முடைய அன்புக்குரிய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் முதலில் உரையாற்றும்போது, `இந்த நாள் டாடா குழுமத்துக்கு ஒரு பொன் நாள்’ என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டுக்கும் ஒரு பொன் நாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கான பொன் நாள். அந்த வகையில், பனப்பாக்கம் சிப்காட்டில் `டாடா ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்’ தொடங்கிவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டாடா குழுமம், தமிழ்நாடுமீது வைத்திருக்கிற நம்பிக்கை, பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதுவும், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிற இப்படியொரு சிறப்பானத் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இங்குப் பங்கேற்றியிருப்பது, எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டும் அல்ல, நம்முடைய தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பெருமை. 2024-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில், `விரைந்து இந்தப் பணிகளை முடித்து, திறப்பு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும்’ என்று சந்திரசேகரனிடம் நான் கோரிக்கைவைத்திருந்தேன். அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, இந்த நிகழ்ச்சிக்குவந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தியாவின் தொழில் முகங்களில், முக்கியமானது நம்முடைய டாடா நிறுவனம். ஸ்டீல், ஐ.டி, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர்ப்பொருள்கள், ஹாஸ்பிடாலிட்டி, தொலைத்தொடர்பு போன்ற பலத்துறைகளில் தடம்பதித்து, மிகப்பெரிய சாதனைகள் படைத்திருக்கக்கூடிய குழுமம்தான் நம்முடைய டாடா குழுமம்.

உலக அளவில், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிற இந்திய பன்நாட்டுக் குழுமமாகவும் டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா என்று சொன்னாலே, அதற்கு ஒரு `பிராண்ட் வேல்யூ’ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவும் இருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ்... இவையெல்லாம், அந்த உறவு சரித்திரத்தின் பொன் ஏடுகள். டாடா நிறுவனம், தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கின்ற பெருமைமிகு அடையாளங்கள்.

இந்தியாவின் வாகன உற்பத்தி மையம், தமிழ்நாடு. மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். மோட்டார் வாகனத் துறையில், இன்றைக்குத் தமிழ்நாடு டாப் பொசிஷனில் இருக்கிறது என்றால், அதற்குப் பெரிய பாரம்பர்யமும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களின் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். அதேபோல, டாடா மோட்டார்ஸ், உலக அளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின்வாகனத் துறையில் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது.

பன்னாட்டுத் தரவரிசைகளைக் கடைப்பிடித்து குவாலிட்டி மற்றும் நம்பகத்தன்மைமிக்க வாகனங்களை உள்நாட்டுச் சந்தைக்கும், உலகச் சந்தைக்கும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட பயணத்தின் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து இந்த ஆலையை நிறுவ நீங்கள் முன்வந்திருப்பதெல்லாம், எங்களுக்கு உள்ளபடியே பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

`டாடா ஜே.எல்.ஆர்’ இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒருத் திட்டம். ஏன் தெரியுமா? இந்தத் தொழிற்சாலையில் டாடா நிறுவனம், உலகத் தரம்வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை உற்பத்திச் செய்யப்போகிறார்கள். உலகப் புகழ்பெற்ற ரேஞ்சு ரோவர் எவோக் தயாரிக்கப்பட்டு, இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. உயர்த் தொழில்நுட்பங்களை தன்னகத்தே ஏற்று, உலக அளவில் எந்த நாட்டின் தயாரிப்புகளுடனும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆலை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு வேறு எங்கேயும் பார்க்க முடியாத ஒருத் தனித்தன்மை உண்டு. எல்லா மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வளர்ந்துவரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

நாம் ஏற்கெனவே லீடராக இருக்கிற துறைகளில், மேலும் உயர்ந்த தரத்தையும், இன்னும் பெரிய சாதனைகளையும் அச்சீவ் செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஸ்பெஷல் கவனத்தோடு, திராவிட மாடல் அரசு உழைத்துக்கொண்டு இருக்கிறது. பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக, உலக அரங்கங்களில் தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு எந்த அளவுக்குத் தொழில் செய்ய உகந்த எளிமையான மாநிலமாக இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள், இந்தத் திட்டத்தில் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் `லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சிப்பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்துக்கொண்டே பி.டெக் பட்டம் பயிலவும், இந்த நிறுவனம் உதவிசெய்கிறது.

இந்த தருணத்தில் இன்னொரு செய்தி சொல்லவும் விரும்புகிறேன். நம் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல `முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு’ இன்னும் சில நாள்களில் நடத்தப்போகிறோம். கிட்டத்தட்ட 100 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதை நீங்கள் தெரிந்துக்கொள்ளப் போகிறீர்கள். திட்டங்களைத் தொடங்கிவைப்பது, அடிக்கல் நாட்டுவது என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதையும் வெளிப்படுத்தப் போகிறோம்.

தமிழ்நாட்டின் விரைவான செயல்பாடுகள், குறித்த நேரத்தில் கிடைக்கின்ற அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள், வணிகம் புரிவதை எளிதாக்கும் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் அந்த மாநாட்டில் காண்பிக்கப் போகிறோம். தமிழ்நாடு அரசு ஒரு கேரன்டி கொடுத்தால், அதை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று உலக முதலீட்டாளர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்குப் போட்டி மாநிலம் என்பதையெல்லாம் தமிழ்நாடு எப்போதோ கிராஸ் செய்துவிட்டது. இப்போது, உலக நாடுகளுடன் போட்டிப்போடக்கூடிய அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. இது, நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒரு முன்னேற்றம்.

ரேஞ்சு ரோவர்

இந்த சிறப்பான தருணத்தில், இந்திய வாகனத் துறை வளர்ச்சிக்கும், இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றவும் மறைந்த ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்புகளை மிகுந்த மரியாதையோடு நினைவுகூற விரும்புகிறேன். அவர் கண்ட கனவுபடியே, டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் மேற்கொள்ளக்கூடிய இந்த முதலீடு, இந்தியா முழுவதும் புதிய எரிசக்தி வாகனத் துறை வளர்ச்சிக்கு வலுவான ஊக்கமாக அமையும். இந்த விழா மூலமாக நாம் பெற்றிருக்கின்ற நல்லுணர்வைத் தொடர்ந்து செயல்படுத்துகிற வகையில், டாடா குழுமம் தனது பல்வேறு தயாரிப்புகளை முக்கிய உற்பத்தி மையமாகத் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.

எந்தத் துறையில் நீங்கள் முதலீடு செய்தாலும், அதற்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம். திராவிட மாடல் அரசை நீங்கள் முழுமையாக நம்பலாம். எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத்தரும் முதலீடுகளை யார் மேற்கொள்ள வந்தாலும், அவர்களை திறந்த மனதோடும், திறந்த கரங்களோடும் தமிழ்நாடு நிச்சயமாக வரவேற்கும். தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும். அதுதான் எங்கள் பண்பாடு; அதுதான் எங்கள் பாரம்பர்யம். தமிழ்நாட்டின் வளர்ச்சித் தனித்தன்மை வாய்ந்தது; பெண்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பது; பொருளாதார வளர்ச்சியோடு சமூக நீதியையும் உள்ளடக்கியது. எங்களுடைய இந்த நல்முயற்சிகளுக்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

TNPSC: `இந்த தேதியில் நடக்கும்' - ரத்தான குரூப் 2, 2A தேர்வுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்க... மேலும் பார்க்க

'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ஆதவ் அர்ஜூனா

TNPSC தேர்வு ரத்தான விவகாரம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்புப் போன்றவற்றை பற்றி தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.ஆத... மேலும் பார்க்க

பாம்பு கடியால் துடித்த சிறுமி; சட்டென செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டு!

தஞ்சாவூர், கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று மாலை, பெரிய கோயிலுக்கு வந்தார். கேரளாந்தகன் வாயிலுக்கும், ராஜராஜன் வாயிலுக்கும் இடையிலுள்ள புல... மேலும் பார்க்க

$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்

`அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்' இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2... மேலும் பார்க்க

Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக

அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநில காங்கிரஸ்... மேலும் பார்க்க

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - காரணம் என்ன?

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி. 'குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்' என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்ட... மேலும் பார்க்க