Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்கும் வரை, வார இறுதி நாட்கள் ஓய்வு நாட்களாக இல்லாமல், வெறும் ஸ்க்ரோலிங் நாட்களாகவே முடிகின்றன. இதிலிருந்து விடுபட சில வழிகள்:
* உங்கள் கவனத்தை சிதைக்கும் சமூக வலைதள நோட்டிபிகேஷன்களை வெள்ளிக்கிழமை இரவே அணைத்து விடுங்கள். அவசரம் என்றால் அவர்கள் அழைக்கட்டும்.

* போனை ஹாலிலேயே சார்ஜ் போடுங்கள். தூக்கத்திற்கு முன் நீல ஒளி (Blue light) உங்கள் கண்களைச் சென்றடையாமல் இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
* நீண்ட நாட்களாக படிக்காத புத்தகம், ஒரு சின்ன நடைப்பயணம் அல்லது நண்பர்களுடன் நேருக்கு நேர் பேசுவது போன்றவை உங்கள் மூளைக்கு உண்மையான புத்துணர்ச்சியைத் தரும்.
* அந்த உணவையோ அல்லது அந்த சூரிய அஸ்தமனத்தையோ கேமரா வழியே பார்க்காமல், உங்கள் கண்கள் வழியே ரசியுங்கள்.
வெயிட்... கொஞ்சம் பொறுங்கள்
இவ்வளவு சீரியஸாக நான் எழுதியதை நீங்கள் எதில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? மொபைல்போனில் தானே...
இந்தக் கட்டுரையை இப்போது நீங்கள் படித்து முடித்ததும், "ஆஹா! சூப்பர் பாயிண்ட்ஸ்" என்று நினைத்துவிட்டு என்ன செய்வீர்கள் தெரியுமா? மெதுவாகக் கீழே ஸ்க்ரோல் செய்து இதற்கு யாராவது கமெண்ட் பண்ணியிருக்காங்களா என்று பார்ப்பீர்கள்.

அப்படியே இன்ஸ்டாகிராம் பக்கம் போய், "நான் இன்னைக்கு போன் யூஸ் பண்ண மாட்டேன்" என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, அதற்கு எத்தனை 'லைக்' வருகிறது என்று ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் செக் பண்ணுவீர்கள்.
"போன் அடிக்ஷன் மிகவும் மோசம்" என்று ஒரு யூடியூப் வீடியோவை 2 மணிநேரம் பார்த்துவிட்டு, கடைசியில் போன் சார்ஜ் தீர்ந்ததும், சார்ஜரைத் தேடி ஓடும்போதுதான் உங்களுக்குத் தெரியும்... ஞாயிற்றுக்கிழமை இரவு என்று...
நாம் போனுக்கு அடிமையில்லை என்று நிரூபிக்க, இந்த போனைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே கிளம்பலாம் என்று நினைப்போம். ஆனால், வெளியே போக 'ரூட்' பார்க்க Google Maps வேண்டுமே? பசி எடுத்தால் சாப்பாடு ஆர்டர் செய்ய Zomato வேண்டுமே? கடைசியில் ஞாயிறு இரவு டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) பற்றி ஒரு பதிவு எழுதிவிட்டு, காலை வரை அதற்கு வரும் ரீச்-ஐப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போவோம்.

உண்மையில் நாம் போனை விட்டாலும், இந்த போன் தான் நம்மைப் பிடித்துக்கொண்டு விடாது போலிருக்கிறது!
இந்தக் கட்டுரையை வாசித்து முடித்த கையோடு, நம் போனை அணைத்துவிட்டு 10 நிமிடம் சும்மா இருக்க முயற்சி செய்யலாமா? (முடியாதுன்னு எனக்கும் தெரியும். இதிலிருந்து விடுபட உண்மையில் வேறு ஏதாவது வழிகள் இருந்தால் கமென்ட்டில் தெரிவிக்கவும். மற்றவர்களுக்கு உதவும்).
ஆக வழக்கம்போல் இந்த வீக் எண்டையும் என்ஜாய் செய்யுங்கள்!




















