செய்திகள் :

`எஃப்ஸ்டீனை, ஜெம் வீரமணியை பாவம் என விடமுடியுமா?" - மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதில்

post image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான செல்வப்பெருந்தகை மலர் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், நடந்த உண்மை என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தற்போது பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தி, இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். தவறு செய்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஏன் அமைச்சராகவே இருந்தாலும் தவறு தவறுதான். அதில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது. அந்தப் பெண் மாவட்ட ஆட்சித் தலைவர் மிகவும் கண்ணியமானவர். இத்தகைய நேர்மையான அதிகாரிகளுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் குறித்து அரசு உடனடியாகத் தலையிட்டு, மக்களுக்கு உரிய தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

மேகதாது அணையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி அணையைக் கட்ட முடியாது என்பதுதான் அந்தத் தீர்ப்பின் சாராம்சமாகும். இவ்வாறு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இருக்கும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் மீண்டும் மீண்டும் அணையைக் கட்டுவோம் என்று கூறுவது எவ்வாறு சாத்தியமாகும்? இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தப் பிரச்னையை மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த கால முதலமைச்சர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் உரிமைகளைக் கட்டிக்காத்து, மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ளனர். அந்தச் சட்டப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பு நமக்குச் சாதகமாக உள்ளது. இதனை ஒருபோதும் முறியடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.

மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம் எனக் கூறியிருக்கிறார். அதை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம், எப்ஸ்டீனைப் பாவம் என்று சொல்ல முடியுமா? அல்லது ஜெம் கிரானைட் வீரமணியைப் பாவம் என்று சொல்ல முடியுமா? யாரைத்தான் பாவம் என்று விட்டுவிட முடியும்? தவறு செய்தால் அது தவறுதான். அதில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்தி, அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசு ஏன் இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறது என்பது தெரியவில்லை.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் - மாணிக்கம் தாகூர்
எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் - மாணிக்கம் தாகூர்

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு இச்சம்பவம் நடந்தது என்று கூறியதாக, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. அதில் உண்மை இருந்தால், "இதில் உண்மை இருக்கிறது" என்று அரசு விளக்கமளிக்க வேண்டும்.
இந்த உண்மையை எவ்வளவு நாட்களுக்குத்தான் மூடி மறைக்க முடியும்? தவறு என்றால் தவறு என்றும், சரி என்றால் சரி என்றும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பிலிருந்தும் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே, இவை அனைத்தையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசின் கையில்தான் உள்ளது." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஆபாச மெசேஜ் விவகாரம்: "மாவட்ட ஆட்சியர் மௌனம் கலைக்க வேண்டும்" - டாக்டர் கிருஷ்ணசாமி

"அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி த... மேலும் பார்க்க

காவிரி: `` தண்ணீர் தர மாட்டேன் என்கிற கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது?"- சீமான் காட்டம்

மைசூரில் நடந்த அரசு விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் பிரதமர் மோடி முன்னிலையில், `காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தல்; தவெக அரசு மௌனம் காக்கிறது!" - TRB ராஜா

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.... மேலும் பார்க்க

மேகதாது: 'உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்'- முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (14-11-2026) முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கட... மேலும் பார்க்க

"மர்மமான வெளிநாட்டு நபர்" - சோனியா காந்தி குறித்து அவதூறாக பதிவிட்ட நடிகை கங்கனா மீது வழக்கு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குறித்து பாலிவுட் நடிகையும், ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மாண்டி தொகுதி மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்குறிய வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்... மேலும் பார்க்க

தீக்குளித்து காவல் நிலையம் நுழைந்த பெண்: ``என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?" - தமிழிசை சௌந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவருக்கும் உரையூர் ஊராட்சி செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், ஊராட்சி செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ... மேலும் பார்க்க