செய்திகள் :

'எங்கள் பங்கு தண்ணீரில் கை வைத்தால், கையை வெட்டுவோம்' - இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

post image

கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்ததையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த நதியை நம்பிதான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறது. இதனால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்பது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவு.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த வாரம் பேசியிருந்தார்.

பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்
பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்
இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்திற்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார், பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்...

"அண்டை நாட்டின் பிரதமர் ஒருவரின் கட்டுப்பாட்டில் ஒரு தண்ணீர் குழாய் இருக்கிறது. பாகிஸ்தானுக்குள் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட ஓடவிட மாட்டேன் என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 40 முதல் 50 சதவிகிதம் பேர் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், தண்ணீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்.

யாரோ ஒரு நபர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு, 50 சதவீத வேலைவாய்ப்பு மற்றும் 25 சதவீத பொருளாதாரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்.

ஆனால், இங்கு நீதிக்கான ஒரு கேள்வியும் எழுகிறது. எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வோம்.

இதை நாங்கள் ஏதோ சும்மா அறிவிக்கவில்லை, மாறாக எங்கள் பங்கிற்கான தண்ணீரில் யாராவது கை வைத்தால், அந்தக் கையை வெட்டுவோம் என்பதை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்தும் காட்டியிருக்கிறோம்.

சிந்து நதி நீர்
சிந்து நதி நீர்

இப்போது மேல்படுகைப் பகுதிக்கு எல்லாம் கீழ்படுகைப் பகுதிக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்த உரிமை இருக்கிறதா என்ன?

அதுவும் நமக்கு இடையே ஒரு ஒப்பந்தமே இருக்கிறது. அப்படி இருக்கும்போது இங்கு எப்படித் தண்ணீரை நிறுத்த முடியும்? இந்த வழக்கைத் தான் நாங்கள் நாளை முன்வைக்கப் போகிறோம்.

சர்வதேச அளவில் நீதி என்றால் என்ன என்பது இனி தீர்மானிக்கப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கீழ்படுகைப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குத் தண்ணீருக்கான உரிமை இருக்கிறதா இல்லையா என்பது இனி தீர்மானிக்கப்படும்."

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க