செய்திகள் :

பிழைப்புக்காக துணி விற்றவர்; இன்று உலகக் கோப்பை ஹீரோ! - ஜெர்மனியை வெளியேற்றிய ஆர்லாண்டோ கில்லின் கதை

post image

கால்பந்து உலகம் அதுவரை பெரிதாக கேட்டிராத ஒரு பெயர்... ஒரே இரவில் சரித்திரம் படைத்திருக்கிறது. 2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது பராகுவே.

இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், அந்த அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில். 120 நிமிடங்கள் களத்தில் அரணாக நின்று, பின்னர் ஷூட் அவுட்டில் இரண்டு பெனால்டிகளைத் தடுத்து, தன் தேசத்தின் ஹீரோவாக அவதரித்திருக்கிறார்.

ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், 6 அடி 6 அங்குல ராட்சசனான ஆர்லாண்டோ கில்லின் தடுப்புகளைத் தாண்டி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

போட்டி முழுவதும் ஐந்து முக்கிய சேவ்களைச் செய்த கில், ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட் வரை கொண்டு சென்றார். ஷூட் அவுட் என்றாலே ஜெர்மனிதான் கிங் என்பார்கள். ஆனால், அந்த சரித்திரத்தை மாற்றிக் காட்டினார் கில்.

ஜெர்மனியின் முதல் கிக்கை எடுத்த காய் ஹாவர்ட்ஸ் மற்றும் நிக் வோல்ட்மேட் ஆகியோரின் ஷாட்களைத் தடுத்து, ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இறுதியாக, ஜொனாதன் தா தன் ஷாட்டை வெளியே அடிக்க, உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஜெர்மனியை ஒரு பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய அணி என்ற பெருமையுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது பராகுவே.

இந்த வெற்றிக்கு பின்னால், வலிகளும் போராட்டங்களும் நிறைந்த ஒரு கதை இருக்கிறது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்லாண்டோ கில் தனது குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைக்க, தன் சொந்த உடைகளையே விற்றுப் பிழைப்பு நடத்தியிருக்கிறார். அந்தக் கடினமான காலகட்டத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு உருக்கமான பதிவு, அப்போது யாராலும் கவனிக்கப்படவில்லை.

ஆனால், ஜெர்மனிக்கு எதிரான இந்த வெற்றிக்குப் பிறகு, அந்தப் பழைய பதிவு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. பராகுவேயின் சான் லோரென்சோவில் பிறந்த கில், தனது சிறு வயதில் ஒரு ஃபார்வர்டு அல்லது மிட்பீல்டராகத்தான் விளையாடத் தொடங்கினார். பின்னர் கோல்கீப்பராக நிலைபெற்றார். ஜாம்பவான்களான சோச லூயிஸ் சிலாவர்ட், ஜஸ்டோ வில்லர் போன்றோர் அலங்கரித்த பராகுவே கோல்கீப்பிங் பாரம்பரியத்தின் அடுத்த வாரிசாக இன்று அவர் உருவெடுத்துள்ளார்.

தடுமாற்றத்தில் தொடங்கிய பயணம்!

இந்த உலகக் கோப்பைப் பயணம் கூட கில்லுக்கு சுலபமாக அமையவில்லை. தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவே படுதோல்வியை சந்தித்தது. விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்தார் கில்.

அடுத்தடுத்து துருக்கி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் ஒரு கோல் கூட வாங்காமல் 'க்ளீன் ஷீட்' சாதனை படைத்தார். துருக்கிக்கு எதிராக ஆறு ஷாட்களையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து ஷாட்களையும் தடுத்து, தனது அணியை சிறந்த மூன்றாவது இடம் பிடித்த அணிகளில் ஒன்றாக அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றார். அந்த நம்பிக்கையின் உச்சம்தான் ஜெர்மனிக்கு எதிரான அவரது அசாத்தியமான ஆட்டம்.

ஜெர்மனிக்கு எதிரான ஆட்டநாயகன் விருதை வென்ற ஆர்லாண்டோ கில்லின் மீது இப்போது உலகின் பெரிய கிளப்களின் பார்வை திரும்பியுள்ளது. குறிப்பாக, பெசிக்டாஸ் மற்றும் வலென்சியா போன்ற ஐரோப்பிய அணிகள் அவரைக் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடைகளை விற்ற ஒரு இளைஞன், இன்று உலகமே உற்றுப் பார்க்கும் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இது வெறும் வெற்றி மட்டுமல்ல, விடாமுயற்சியின் அடையாளம்!

"சாக்குப்போக்கு வேண்டாம், இது எங்களுக்கு தகுதியான தோல்வி!" - ஜெர்மனி கேப்டன் கிம்மிச்சின் நேர்மை

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடர... மேலும் பார்க்க

கோல்கீப்பர் கைகளில் நொறுங்கிய நெதர்லாந்து கனவு - பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ `த்ரில்' வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் கொண்ட நாக்-அவுட் சுற்றில், பெனால்டி ஷூட் அவுட் வரை நீண்ட த்ரில்லான போட்டியில், நெதர்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்ன... மேலும் பார்க்க

பிரேசிலுக்கு தண்ணி காட்டிய ஜப்பான்... இன்ஜுரி டைமில் மார்டினெல்லி மேஜிக்! பிரேசில் த்ரில் வெற்றி!

உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி கடைசி நிமிட கோலால் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மாற்று வீரர... மேலும் பார்க்க

Japan: தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 32 அணிகள் மோதும் நாக் அவுட் சுற்றில், பிரேசில் அணிக்கு எதிராக கடைசி நிமிடம் வரை கடுமையாகப் போராடி தோல்வியடைந்தாலும், ஜப்பான் அணியின் ரசிகர்கள் தங்கள் நன்னடத்தையால் மீ... மேலும் பார்க்க

உலகக்கோப்பை ஷாக்! பெனால்டியில் ஜெர்மனியை வெளியேற்றிய பராகுவே! - திக் திக் போட்டி!

கால்பந்து உலகக்கோப்பை 2026 தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒன்றான ஜெர்மனி அணி, பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. பர... மேலும் பார்க்க

FIFA : சூடு பறக்கும் ஆட்டமே இனிமேதான்! உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை?

2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அணிகளின் வெற்றி, தோல்விகளைத் தாண்டி, யார் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிட... மேலும் பார்க்க