செய்திகள் :

`இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும்; ஏனென்றால்..!' - நிர்மல் குமார்

post image

தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல்பட்டார்கள். அதனால்தான் அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் இருந்து அவ்வளவு பேர் வெளியேறி இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். பிற கட்சிகளில் இருந்து யாராவது வெளியேறினால் அதற்கும் தவெக-விற்கும் எந்த தொடர்பும் இல்லை.

எந்தக் கட்சியில் இணைந்து செயல்படுவது என்பது அவரவர் முடிவு. தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகி உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி, இ.பி.எஸ், அவருடைய மகன் மற்றும் சில தொழிலதிபர்கள் இணைந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரும் இபிஎஸ் குடும்பத்தினரும் தங்கள் குடும்ப சொத்தை காக்கவே இந்த முயற்சி செய்கின்றனர். பல வழக்குகள் வரும் என்ற பயத்தில் இன்று காலை வரை திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்கின்றன.

தவெக நிர்மல் குமார்

திமுக, அதிமுக சேர்ந்து பாஜக-விடம் சரண்டர் ஆகி, ஒரு கேபினட் இடம் கேட்டு நிற்கப் போகின்றன. இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும். ஸ்டாலினும், எடப்பாடியும் வீட்டுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிட்டு கட்சியை இணைத்து விடுவார்கள். இவர்கள் பதவிக்கு ஆசைப்படுவதால் மற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகுகின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்'- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் கொதித்த ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள்... மேலும் பார்க்க

மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக நிலைப்பாடு இதுதான்!' - திருமாவளவன்

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள... மேலும் பார்க்க

`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ - கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், ``தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து... மேலும் பார்க்க

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை... மேலும் பார்க்க

``எடப்பாடியாரே, நீங்கள் எடுத்த அந்த தன்னிச்சையான முடிவு... விடைபெறுகிறேன்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க-விலிருந்து 6-வது எம்.எல்.ஏ-வாக கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க முன்​னாள் அமைச்​சருமான எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜினாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தி... மேலும் பார்க்க

ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து விலகும் விசுவாசிகள்!

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சமிபத்தில்தான் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி-க்கள், துணை முதல்வர் ஏக்நாத்... மேலும் பார்க்க