"சூர்யா சாருடன் படம் செய்ய wait பண்றேன்; ஆனா, 49, 50-வது படம் பண்றேனா.?" - ஆர்.ஜ...
'எதில் இறங்கினாலும் பெஸ்ட்டா இருக்கணும்'னு செல்வா சொல்லுவாரு; அதனால.! - ரோஜா | Aval Awards
அவள் விகடனின் `எவர்கிரீன் நாயகி’ விருதை நடிகை ரோஜாவுக்கு, நடிகர் நெப்போலியனும், நடிகர் `டாப் ஸ்டார்’ பிரசாந்த்தும் வழங்கினார்கள்.
விருது வழங்கிய பின், ரோஜா குறித்து நெப்போலியன், ''ரோஜா எவர்கிரீன் என்பதை நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார். எனக்கு டான்ஸே ஆடத் தெரியாது. ஆனால், `ஜக்கு ஜக்கு வத்திக்குச்சி...’ பாட்டில் என்னை ரோஜாவுடன் ஆட வைத்திருப்பார்கள்.
திருமணமாகும் முன்பே செல்வமணியும் ரோஜாவும் எனக்குப் பழக்கம். துணிச்சலாக அரசியலுக்கு வந்து, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொகுதி மக்களுக்குச் சேவை செய்துவருகிறார்.’’ என்று பேசினார்.

பிரசாந்த் பேசும்போது, ''முதலன்முதலாக `செம்பருத்தி’யில் நடிக்கும்போது வாசன் ஹவுஸில் ஒரு பள்ளிச் சிறுமியைப்போல இருந்த ரோஜாவை, 'இவர்தான் ஹீரோயின்' என அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
படம் முழுக்க, செல்வமணி சார் எங்களை `ரைட்டில் பாருங்கள், லெஃப்ட்டில் பாருங்கள்’ என்றுதான் வேலை வாங்கினார். ஆனால், படம் அப்படி இருந்தது.
நாங்கள் இருவரும் பள்ளி நண்பர்களைப் போன்றவர்கள். 'சிங்கப்பெண்' என்ற வார்த்தைக்கு ரோஜாதான் தகுதியானவர்.
சினிமாவில் ஹீரோயினாக ஜெயித்தார். 10 ஆண்டுகள் காதலித்து, ஜெயித்தார். மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்கவைத்துவிட்டார். இப்போது அரசியலிலும் கலக்குகிறார்.
ரோஜா நேர்மையானவர். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுவார். அப்படியொரு குணாதிசயம்கொண்டவரை செல்வமணி சார் நன்றாகச் சமாளிக்கிறார்.'' என்றார்.
விருது பெற்ற ரோஜா, " 'ரொம்ப சைலன்ட்டாவே இருப்பியே... எப்படி இவ்வளவு தைரியமா பேசுற?’ என்றுதான் எல்லாரும் கேட்பார்கள்.
ஆனால், செல்வாதான் என்னிடம் 'நீ எதில் இறங்கினாலும் பெஸ்ட்டா இருக்க வேண்டும்' என்பார்.
அது எனக்கு மனதில் நின்றுவிட்டது. அரசியலுக்குள் வரும்போது நான் ஜீரோதான். ஆனால், நான் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால், அதற்காக நேரம் ஒதுக்கி முழுமையாக அறிந்து பேசுவேன்" என்றார்.













