செய்திகள் :

``வட கர்நாடகா தனிமாநில கோரிக்கை 5 - 10 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறும்" - பாஜக எம்.எல்.ஏ பேச்சு

post image

வட கர்நாடகாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் கோரிக்கை, 5 முதல் 10 ஆண்டுகளில் நிஜமாகும் வாய்ப்பு உள்ளது என கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலச்சந்திர ஜர்கிஹொலிக் தெரிவித்திருக்கிறார். அரபாவ் தொகுதி எம்.எல்.ஏ-வான பாலசந்திர ஜார்கிஹோளி, மறைந்த முன்னாள் அமைச்சர் உமேஷ் கத்தி முன்வைத்த தனி மாநிலக் கோரிக்கை குறித்து நினைவு கூர்ந்து பேசினார். அப்போது, ``தனி மாநிலம் உருவானால் பெலகாவி அதன் தலைநகராக மாறும். இப்பகுதி மகத்தான வளர்ச்சியைக் காணும் என உமேஷ் கத்தி அடிக்கடி கூறுவார். சில நேரங்களில் எங்களுக்கும் அது நல்ல யோசனையாகவே தோன்றியுள்ளது.

கர்நாடகா சட்டமன்றம்

இப்பகுதி மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெலகாவி சுவர்ண விதான சௌதா கட்டப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு இங்கு வளர்ச்சி ஏற்படவில்லை. தனி மாநிலம் குறித்த அவரது கருத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். வட கர்நாடகாவின் பிரச்னைகளை பாஜக தீவிரமாகக் கையிலெடுக்கும். தனி மாநிலக் கோரிக்கை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயமாக நடக்கலாம்" என்றார்.

பெலகாவி பகுதியைக் கர்நாடகாவிலிருந்து பிரித்து மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கையை மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி (MES) அமைப்பு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

`` `திறந்துதான் பாருங்களேன்னு' சொன்னாங்க; இப்போ அடித்தளமே ஆடிப்போய் கிடக்குது..!"- முதல்வர் விஜய்

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``வாழ்... மேலும் பார்க்க

``ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா?" - திருமாவளவன் கேள்வி

ஆட்சியர் விவகாரத்தை தொடர்ந்து பேசிவருவதன் மூலம் ஆட்சியருக்கு நெருக்கடியை உள்ளாக்குகிறார்களா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாவட்ட ஆட்சியருக்கு... மேலும் பார்க்க

`பாஜக-வின் துரந்தர் மாணிக்கம் தாகூர் ... பனையூர் பங்களாவுக்கு வாட்ச்மேன்!" – தமிழன் பிரசன்னா காட்டம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநரைச் சந்தித்திருக்கும் உதயநிதியை, கிண்டலாக விமர்சித்திருக்கும் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளது தி.மு.க தரப்பு!கள்ளக்குற... மேலும் பார்க்க

``ஒருதலைபட்சமான தீர்ப்புகள்; நாட்டின் அமைதி சீர்குலையும் அபாயம்"- விசிக எழில் கரோலின் பேட்டி

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதல் சர்ச்சை தொடங்கியது. இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிடுவதாக விசிக, சிபிஐ உள்ளிட்ட தவெ... மேலும் பார்க்க

ஓடிய அமைச்சர்; கள்ளக்குறிச்சியை அடுத்து பல்லடம்? டு கனிமொழி Vs உதயநிதி வரை... கழுகார் அப்டேட்ஸ்

சுழன்றடிக்கும் சர்ச்சையில் பல்லடம் த‌.வெ.க எம்.எல்.ஏ ராம்குமார்!அ.தி.மு.க-வின் 25 ஆண்டுகாலக் கோட்டையான பல்லடத்தில், அக்கட்சி வேட்பாளர் பரமசிவத்தை 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திக் கவனம் ஈ... மேலும் பார்க்க

`கலெக்டர் சிறைக்குச் செல்வது உறுதி!' - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வெடிக்கும் இந்து முன்னணி!

திருப்பரங்குன்றத்தில் ஆகம முறைப்படி தீபம் ஏற்றப்பட்டதன் பின்னணியில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நீதிமன்ற அவமதிப்பு என எதிரெதிர் வாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியிருக்கின்றன!மதுரையை அடுத்துள்ள அறுபடை வீட... மேலும் பார்க்க