செய்திகள் :

`` `திறந்துதான் பாருங்களேன்னு' சொன்னாங்க; இப்போ அடித்தளமே ஆடிப்போய் கிடக்குது..!"- முதல்வர் விஜய்

post image

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``வாழ்க்கையில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஊழல் என்பது பழைமையான விஷயம்தான். ஆனால், மக்கள் அதற்குப் பழகிப்போய்விட்டார்கள் என்று நினைத்து, நம்மால் அதைக் கடந்து சென்றுவிட முடியாது. அது ஒரு நாள்பட்ட நோய் போன்றது. அதைக் குறைந்தபட்சம் கட்டுப்படுத்தலாம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகளால்தான், இங்கே சிலருடைய அடித்தளமே ஆடிப்போய்க் கிடக்கிறது. இப்போது சமீபத்தில் கல்வியிலேயே ஊழல் நடந்திருக்கிறது என்றால், அதை எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? கல்வித் துறைதானே எல்லாவற்றுக்கும் ஓர் அடித்தளம்? பள்ளிப் பாதுகாப்பில் வந்த ஊழலால்தான் கும்பகோணம் பள்ளி விபத்து நடந்தது. இப்போது நினைத்தால்கூட மனம் பதறுகிறது. `என் மேசையில் மூன்று ஃபைல்கள் இருக்கின்றன' என்றுதான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து, `அதைத் திறங்களேன்... திறந்துதான் பாருங்களேன்!'-ன்னு சொன்னாங்க. `சரி'னு திறந்தோம். அதைதான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

பிள்ளைகள் படிக்கும் நூலகப் புத்தகங்களில்கூட ஊழல் செய்திருக்கிறார்கள். சத்தியமாக இவர்களையெல்லாம் எங்கே கொண்டுபோய் வைப்பது, என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த முறைகேடு வெளியே வருகிறது. இன்னும் மற்ற நூலகங்களிலெல்லாம் என்னென்ன நடந்திருக்கிறதோ, ஒவ்வொன்றாக வெளியே வரும். இதெல்லாம் அறிவு உலகமா இல்ல ஊழல் உலகமான்னு எனக்குத் தெரியவில்லை. நான் அரசியலுக்கு வந்தது ஒவ்வொரு குடும்பத்துக்காகவும்தான். உங்கள் வாழ்க்கை பாதிக்கிற அளவுக்கு இப்படி எதையும் நடக்கவிடமாட்டேன்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா?" - திருமாவளவன் கேள்வி

ஆட்சியர் விவகாரத்தை தொடர்ந்து பேசிவருவதன் மூலம் ஆட்சியருக்கு நெருக்கடியை உள்ளாக்குகிறார்களா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாவட்ட ஆட்சியருக்கு... மேலும் பார்க்க

`பாஜக-வின் துரந்தர் மாணிக்கம் தாகூர் ... பனையூர் பங்களாவுக்கு வாட்ச்மேன்!" – தமிழன் பிரசன்னா காட்டம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநரைச் சந்தித்திருக்கும் உதயநிதியை, கிண்டலாக விமர்சித்திருக்கும் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளது தி.மு.க தரப்பு!கள்ளக்குற... மேலும் பார்க்க

``ஒருதலைபட்சமான தீர்ப்புகள்; நாட்டின் அமைதி சீர்குலையும் அபாயம்"- விசிக எழில் கரோலின் பேட்டி

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதல் சர்ச்சை தொடங்கியது. இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிடுவதாக விசிக, சிபிஐ உள்ளிட்ட தவெ... மேலும் பார்க்க

ஓடிய அமைச்சர்; கள்ளக்குறிச்சியை அடுத்து பல்லடம்? டு கனிமொழி Vs உதயநிதி வரை... கழுகார் அப்டேட்ஸ்

சுழன்றடிக்கும் சர்ச்சையில் பல்லடம் த‌.வெ.க எம்.எல்.ஏ ராம்குமார்!அ.தி.மு.க-வின் 25 ஆண்டுகாலக் கோட்டையான பல்லடத்தில், அக்கட்சி வேட்பாளர் பரமசிவத்தை 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திக் கவனம் ஈ... மேலும் பார்க்க

`கலெக்டர் சிறைக்குச் செல்வது உறுதி!' - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வெடிக்கும் இந்து முன்னணி!

திருப்பரங்குன்றத்தில் ஆகம முறைப்படி தீபம் ஏற்றப்பட்டதன் பின்னணியில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நீதிமன்ற அவமதிப்பு என எதிரெதிர் வாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியிருக்கின்றன!மதுரையை அடுத்துள்ள அறுபடை வீட... மேலும் பார்க்க

புகையால் சூழப்பட்டிருக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனை; முட்டி மோதும் நிர்வாகங்கள்.. தீர்வுதான் என்ன?

ஊரு தூங்கும் நேரம் ஊருக்கு நடுவே...உசுர கொல்லும் புகை கொழுந்துட்டு எரிய.. என்ற வரிகளை ஒருவர் பாடுவதுபோல காண்போர் மனதை பதைபதைக்க வைக்கும் காணொளிகள்,`seemai vibes' என்ற வலைதளப் பக்கத்தில் வெளியாகின. காண... மேலும் பார்க்க