செய்திகள் :

Aval Awards "பக்தி ஆல்பத்துக்காக 1008 அம்மன் பெயர்களை உச்சரித்து.!"- சித்ரா குறித்து ஸ்ரீகாந்த் தேவா

post image

பாடகி சித்ராவிற்கு 'கலைநாயகி' விருதை வழங்கினார்கள் கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா, பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குநர் விக்ரமன் ஆகியோர்.

இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, ``ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து இசையைக் கற்றுக்கொண்டு, பாடப் பாட அதைத் தொழிலாக மாற்றி, இந்த அளவுக்குச் சாதித்திருக்கிறார் சித்ரா.

இதில் எனக்குக் கூடுதல் சந்தோஷம் என்னவென்றால், அவர் தமிழில் பாடிய முதல் பாடலுக்கே என்னுடன் சேர்ந்துதான் பணியாற்றினார். இளையராஜா அண்ணனுக்கு முன்பு ஒரு கீர்த்தனையைப் பாடிக் காட்டினார்.

சித்ரா விருது
சித்ரா விருது

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அத்தனை மொழிகளிலும் பாடக்கூடியவர் சித்ரா. தனியாக கிளாசிக் கச்சேரி நடத்தக்கூடியவர். அவருக்கு நாங்கள் விருது கொடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி’’ என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ``சித்ரா அம்மாவுக்கு விருது கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அப்பா மேலிருந்து வாழ்த்திக்கொண்டேயிருப்பார். ஓர் அம்மன் பாடலில் 108 அம்மன் பெயர்களை எந்தப் பிழையும் இல்லாமல் உச்சரித்து, சித்ரா அம்மா பாடியிருப்பார்.

அதே மாதிரி, ஒரு பக்தி ஆல்பத்துக்காக 1,008 அம்மன் பெயர்களை உச்சரித்து, சாமானியனுக்கும் போய்ச் சேரும்படி பாடியிருக்கிறார். அப்பா மேலிருந்து உங்களை ஆசீர்வதித்துக்கொண்டேயிருப்பார்’’ என்றார்.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

Aval Awards: ``அந்தக்காலத்து ஏ.ஐ சித்ரா; அவ்ளோ Perfect-ஆ பாடுவாங்க!’’ - ஶ்ரீனிவாஸ்

'கலைநாயகி' விருது பெற்ற கே.எஸ்.சித்ரா குறித்து, பாடகர் ஸ்ரீனிவாஸ் பேசும்போது, ``பள்ளி, கல்லூரி காலத்தில் நாங்கள் ஓரளவுக்கு பாடுவோம். ஆனால், சித்ரா அப்போதே வேறு கிரகத்திலிருந்து வந்ததைப்போல பாடுவார். இ... மேலும் பார்க்க

"அரசியலமைப்பு எனக்குச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்..!" - அருணா ராய் | Aval Awards

'அவள் ஆளுமை' விருதை அருணா ராய்-க்கு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி வழங்கி சிறப்பித்தார்.`அவள் ஆளுமை’ விருதைப் பெற்றுக்கொண்ட அருணா ராய் நிறுத்தி, நிதானமாகப் பேசினார்... ``இன்று ஒரு மி... மேலும் பார்க்க

Aval Awards: 'பெண்ணென்று கொட்டு முரசே!’ - அருணா ராய் முதல் நிமிஷா வரை; இன்று அவள் விருதுகள் | Live Blog

யாருக்கு என்ன விருதுகள்?இந்த ஆண்டு...பெண்கள் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகளுக்காக 80 வயதைக் கடந்தும் களமாடி வரும் அருணா ராயின் கைகளைச் சென்றடைகிறது ‘அவள் ஆளுமை’ விருது.யதார்த்த நடிப்பால் நம... மேலும் பார்க்க

அவள் விருதுகள்: இந்த ஆண்டிற்கான அவள் விகடன் விருதினை பெறவிருக்கும் சாதனையாளர்கள்! | முழு தொகுப்பு

சமுக சேவகி - அருணா ராய்பாடகி கே.எஸ்.சித்ராஇசைக் கலைஞர் ஷோபா சந்திரசேகர்நடிகை நித்யா மெனென்நடிகை ரோஜாகட்டக்கூத்து கலைஞர் திலகவதி பழனிசைகை மொழிப்பெயர்ப்பாளர் விஜயா பாஸ்கரன்எழுத்தாளர் இயக்குநர் தமயந்திபொ... மேலும் பார்க்க

அவள் விருதுகள்: சமூக சேவகி அருணா ராய் முதல் பரணிகா இளங்கோவன் வரை!சாதனைப் பெண்களின் சங்கமம்!

விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பெண்களுக்கான இதழான அவள் விகடனுக்கு இது 29-வது ஆண்டு. சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் ... மேலும் பார்க்க