செய்திகள் :

தாராபுரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கைதானது TVK நிர்வாகியா? சர்ச்சையும் MLA விளக்கமும்!

post image

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஹாரூன் ரஷீத், 11 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹாரூன் ரஷீத் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான ஹாரூன் ரஷீத், த.வெ.க-வைச் சேர்ந்த நிர்வாகி என்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ சத்தியபாமாவின் ஆதரவாளர் என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின. இது குறித்து சத்தியபாமா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சத்தியபாமாவிற்கு ஆதரவாக தாராபுரத்தில் த‌.வெ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனர்களில் ஹாரூன் ரஷீத் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தாராபுரம் த.வெ.க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை சத்தியபாமா திறந்து வைத்த வீடியோக்களை எதிர்க்கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.

போக்சோ வழக்கில் கைதான ஹாரூன் ரஷீத்

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ சத்தியபாமா, "தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனக்கும் த.வெ.க ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பொய்யான தகவல்களை அவதூறாக சிலர் பரப்பி வருகின்றனர். அந்த நபர் யார் என்றே எனக்குத் தெரியாது.

சத்தியபாமா

கட்சிக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் த.வெ.க- வில் ஆட்டோ ஓட்டுநர் சங்கமே கிடையாது. இதில் எந்த உண்மையும் இல்லை" என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். சத்தியபாமாவின் இந்த மறுப்புக்கும் எதிர்க்கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்

`பேராசை' - ரூ.8 கோடி ஆசையில் கணவன், மகனை மெல்ல சாகடிக்க சாப்பாட்டில் விஷம் கலந்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவனின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை படிப்படியாக கொலை செய்யும் நோக்கில் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்த பெண் சிக்கினார். காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் வசிக்கும் சுஷில் கும... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ராகி களியில் விஷம் வைத்து கணவர் கொலை; மனைவி கைது; என்ன நடந்தது?

ராகி களியில் விஷம் வைத்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி கைது செயப்பட்டுள்ள சம்பவம், தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murderகிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர... மேலும் பார்க்க

மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்; உடந்தையாக இருந்த காதல் கணவர் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவிக்னேஷ் (25). கூலித் தொழிலாளியான இவர் பி.எஸ்.பி. ஏ.ஐ படிக்கும் 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் ம... மேலும் பார்க்க

வேலூர்: காதல் மனைவி வெட்டிக் கொலை - நடத்தை சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். ஆவின் பாலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கும், கீர்த்திகா (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றத... மேலும் பார்க்க

கோர்ட் வளாகத்தில் வைத்து கை துண்டிப்பு; துப்பாக்கிச்சூடு- குற்றவாளியைக் கொல்ல நடந்த பரபரப்பு சம்பவம்

புனே, சிவாஜிநகர் கோர்ட்டில் ஆஜராவதற்காக மந்தர் மாருதி என்பவர் வந்தார். அவர்மீது கடந்த ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நிலம் மற்றும் நிதிப் பிரச்னை தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் ம... மேலும் பார்க்க

இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சகஊழியர்கள்; இரு பெண்கள் உட்பட மூவர் கைது

டெல்லியில் உணவகம்(கேபே) ஒன்றில் பணிபுரியும் 22 வயது இளம் பெண் தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவருடன் பிரீத் விகார் பகுதியில் இருக்கும் 'சல்டனேட் கேஃப்' (Saltanate Cafe) என்ற இடத்திற்குச் சென்றார். அங... மேலும் பார்க்க