செய்திகள் :

"எனக்கு டைபாய்டு காய்ச்சல்; தர்மேந்திர பிரதான் ராஜினாமா நிச்சயம் நடக்கும்" - அபிஜித் தீப்கே

post image

டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி.

காக்ரோச் ஜனதா கட்சியின்‌ நிறுவனர் அபிஜித் தீப்கே கடந்த 18-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை மற்றும் கோரிக்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் அபிஜித் தீப்கே...

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

"உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, கடந்த சில நாட்களாக எனக்கு உடம்பு சரியில்லை. ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன.

எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். தினமும் காலையிலும் மாலையிலும் IV போடுகிறார்கள்.

ஆனால், நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்தக் 'கரப்பான் பூச்சிகள்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் சேர்ந்து இந்தப் போராட்டத்தைப் மாபெரும் வெற்றியாக்கியிருக்கிறீர்கள்.

உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியும், இந்தப் போராட்டத்தை இந்த அளவிற்கு வெற்றிபெறச் செய்ததற்கு வாழ்த்துகளும்.

நாம் தொடர்ந்து இதேபோல் அமைதியான வழியில் போராடினால், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நிச்சயம் நடக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மிக்க நன்றி!"

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க