செய்திகள் :

"எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே" - மதுராந்தகம் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பதிவு

post image

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுகந்தி போட்டியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள தரவுகளின்படி, 15-ம் சுற்று முடிவில், சுகந்தி 1,453 வாக்குகள் பெற்றிருக்கிறார். அந்தத் தொகுதியில் முன்னணியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் இருந்து வருகிறார்.

தற்போது சுகந்தி தனது முகநூல் பக்கத்தில், “நாங்கள் தோற்றுவிடவில்லை!

எவராலும் எங்களைத் தோற்கடிக்கவும் முடியாது!

இழப்பதற்கு ஏதுமற்றவர்களுக்காகப் போராடுகிற நாங்கள் இழப்பதற்கும் ஏதும் இல்லை.

எங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்போதும் மக்களை நாங்கள் குற்றப்படுத்தியதில்லை.

இப்போதும் குற்றப்படுத்தப் போவதில்லை!

எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே.

கம்பீரமாகப் போராடினோம்! நூற்றுக்கணக்கான தோழர்கள் மாசற்ற உழைப்பை நல்கினார்கள். தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் சென்றோம்.

வீதிகள் அனைத்திலும் அரசியல் உரையாடல் நடத்தினோம்.

எங்கும் வெறுப்பு இல்லை.

அன்பை மட்டுமே வெளிப்படுத்தினார்கள். ஆதங்கமாய் பேசினார்கள்.

அதுதான் எங்களது நம்பிக்கையாக இப்போதும் முன் செல்கிறது.

எப்போதும் எங்களுக்கு ஓய்வில்லை!

இப்போது இடதுசாரிக் கட்சிகள் இணைந்து வருகிறோம்!

முன்னிலும் பலம் கொண்டு பணியாற்றுவோம்!

அறம் சார்ந்து அரசியலின் அடையாளம் நாங்கள்! உழைக்கும் மக்களின் கடைசி நம்பிக்கை நாங்கள்!

மதுராந்தகம் மக்களுக்கும்

தோழர்களுக்கும் நன்றி.

இன்குலாப் ஜிந்தாபாத்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

இடைத்தேர்தல் வெற்றி: "மிருகக் குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர்" - முதல்வர் விஜய்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் வெற்றி: 'எல்லாமே மாறும்' - சொல்லி அடித்த முதல்வர் விஜய்!

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறது த.வெ.க. அதாவது, இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்த... மேலும் பார்க்க

தவெக: 'சாதகமான இடைத்தேர்தல் முடிவுகள்' - கூட்டணி கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடந்தத் தேர்தல் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்... மேலும் பார்க்க

அமெரிக்கா கிரீன் கார்டு கட்டுப்பாடு: கவலைப்பட வேண்டுமா? இந்தியாவுக்கு காத்திருக்கும் வாய்ப்பு என்ன?

அமெரிக்காவின் தொழிலாளர் துறையானது காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, HCL டெக்னாலஜிஸ், கேப்ஜெமினி ஆகிய ஆறு ஐ.டி நிறுவனங்களையும் ‘நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்... மேலும் பார்க்க

பொதுத்தேர்தல் vs இடைத்தேர்தல்: அதிமுக கோட்டையை வென்ற தவெக; பலத்தை நிரூபித்ததா திமுக? - ஓர் ஒப்பீடு!

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ... மேலும் பார்க்க

அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்ட... மேலும் பார்க்க