செய்திகள் :

இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? ஆபாயமா..?

post image

'ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே... ஒன்று தி.மு.க இன்னொன்று த.வெ.க' என முதல்வர் விஜய் மேடைதோறும் பேசிவந்ததைப் போலவே அமைந்திருக்கின்றன இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்.

மதுராந்தகம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றிருக்கிறார். தாராபுரம் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்க்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா.

எதிர்க்கட்சியான தி.மு.க இரண்டிலும் தோற்றாலும் அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தைத் தட்டிப்பிடித்திருக்கிறது.

பரந்தாமன், உதயநிதி ஸ்டாலின்
பரந்தாமன், உதயநிதி ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் களம்கண்ட போதே மதுராந்தகம் தொகுதியில் 2026-ல் மூன்றாமிடம் பிடித்தது தி.மு.க. பின்னர் கூட்டணிக் கட்சிகளெல்லாம் த.வெ.க முகாமுக்குத் தாவிய நிலையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாமிடமே கிடைக்கும் எனக் கருதினோம்.

அதுபோல தாராபுரத்தில் கட்சிக் கட்டமைப்பு வலுவாக இல்லாததோடு கவுண்டர் சமூகத்தினர் நிறைந்து வாழுவதால் அங்கே அ.தி.மு.க வாய்ஸ் இருக்கும் என்றே சொல்லப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் மூன்றாமிடத்தையே பிடிப்போம் என்றுதான் நினைத்தோம்.

அ.தி.மு.க வலுவாக இருக்கும் மதுராந்தகத்தில் அக்கட்சியைப் பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறோம். பட்டியல் சமூகத்தினர், வன்னியர் நிறைந்து வாழும் பகுதிகளில்கூட தி.மு.க-வுக்குக் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

ஓர் இடைத்தேர்தலில் எந்தக் கூட்டணிக் கட்சிகளின் தயவும் இல்லாமல் இரண்டாம் இடத்தையும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது ஆறுதல் தரக்கூடிய செய்தி" என்றனர்.

திமுக வேட்பாளர் சுகன்யா
திமுக வேட்பாளர் சுகன்யா

அரசியல் நோக்கர்கள் சிலரோ "'கூட்டணிக் கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க இல்லை' என்ற த.வெ.க-வின் கூர்மையான விமர்சனங்களை உடைத்துவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால் அப்படிச் சொல்லிவிட முடியாது. 2026 பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது தி.மு.க. ஆனால், தற்போது 57 ஆயிரம் வாக்குகளையே பெற்றிருக்கிறது.

மதுராந்தகத்தில் 60 ஆயிரம் வாக்குகள் பெற்ற கட்சி 50 ஆயிரம் வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது. சொல்லப்போனால், கட்சி வாக்குகளையே இழந்திருக்கிறது தி.மு.க. கடந்தமுறை பெற்ற வாக்குகளைப் பெற்றிருந்தால் தி.மு.க வென்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் கோட்டை விட்டிருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுராந்தகத்தில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் மரகதம். அங்கு கூட்டணி இல்லாமல்தான் தடுமாறியிருக்கிறது தி.மு.க" என்றனர்.

மதுராந்தகத்தைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகள் இல்லாதது தி.மு.க-வுக்கு மிகப்பெரிய மைனஸ், தாராபுரத்தைப் பொறுத்தவரை 57 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பது தி.மு.க-வுக்கு ஆறுதல்!

தாராபுரம், மதுராந்தகம்: "தவெக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்" - செங்கோட்டையன் உறுதி

ஈரோடு மாவட்டத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கான நலத்திட்டங்களை இந்த அரசு தொய்வின்றி... மேலும் பார்க்க

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு | Photo Album

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சா... மேலும் பார்க்க

தாராபுரம்: இளம் தலைமுறை முதல் மூத்த குடிமக்கள் வரை குறையாத ஆர்வம்; வாக்குப்பதிவின் Highlights|Photos

தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துட... மேலும் பார்க்க

By Election: 320 பூத்கள், 3,500 போலீஸார்; தாராபுரத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் முக்கிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் | Photos

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்பலத்த பாதுகாப்புடன் கொண்டுச் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்பலத்த பாதுகாப்புடன் கொண்டுச் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்பலத்த பாதுகாப்புடன் கொண்டுச் செய்ய... மேலும் பார்க்க

தாராபுரம்: முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளியா? சர்ச்சை பின்னணி என்ன?

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த‌.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேற்று ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வாக்காளர்களைக் கவரும் வகையில் மாட... மேலும் பார்க்க