செய்திகள் :

"ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறீர்கள்" - விஜய்யை விமர்சிக்கும் சிபிஎம் பாலகிருஷ்ணன்; பின்னணி என்ன?

post image

இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்து அரசு எந்திரங்களையும், கல்லூரி இயக்குநரையும் தவறாகப் பயன்படுத்தும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``தமிழ்நாடு முழுக்க இருக்கும் காவல்துறை தலைமைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில், இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான் பூச்சி அமைப்பினர் நடத்தும் போராட்டங்களை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

அத்துடன் அது தொடர்பான அறிக்கையை உடனடியாக தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இப்படியான ஒரு சுற்றறிக்கை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட வெளியானது கிடையாது. 80 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாணவர்களின் போராட்டங்களைக் கண்காணிக்க, ஒடுக்க இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியானது கிடையாது.

அப்படி இருக்கும்போது தற்போது மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்படும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுற்றறிக்கை மூலம் நிறைவேற்றி வருகின்றனர். தலைமைச் செயலாளர் இப்படி ஒரு அறிக்கை கேட்டது தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தெரியாதா ?

தமிழ்நாட்டில் தற்போது நடப்பது த.வெ.க-வின் ஆட்சியா… அல்லது அதிகாரிகளின் ஆட்சியா ? இதுகுறித்து இன்னும் முதலமைச்சர் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை ? இது ஒரு வரலாற்றுப் பிழை. இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்ட தலைமைச் செயலாளரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். இப்படி எத்தனை அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் வந்தாலும் அனைத்தையும் நாங்கள் தவிடுபொடியாக்குவோம்.

முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் ? வாய் திறவா முதலமைச்சரா அவர் ? இதை அரசியல் தவறாகக் கருதுகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால் இந்த ஆட்சி இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நீங்கள் அவர்களையே கண்காணிப்பது, ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதற்குச் சமம். அப்படித்தான் செய்கிறீர்களா?

இடதுசாரிகளையும் மாணவர்களையும் ஒடுக்குவதற்குத்தான் இந்த அரசு இருக்கிறதா ? இதே நிலை நீடித்தால் இந்த அரசை ஆதரிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதனால் உடனடியாக தலைமைச் செயலாளரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் விஜய் உடனே பகிரங்க மன்னிப்பைக் கேட்க வேண்டும். சுற்றறிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் முழுக்க எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க