செய்திகள் :

ஒதுக்கிய சமூகம்; விடாத சுயமரியாதை; உழைப்பை ஆயுதமாக்கிப் போராடும் திருநங்கை ஸ்மிதா

post image

சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ போராடும் திருநங்கை ஸ்மிதா அவர்களிடம் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம்..

"என்னோட சொந்த ஊரு மதுரை பக்கத்துல உசிலம்பட்டி. எனக்கு அப்பா அம்மான்னு யாரும் இல்லை. நான் திண்டுகல்'ல உள்ள "அவேக் கருணை இல்லம்"-ன்ற அசிரமத்துலதான் வளர்ந்தேன். அங்கயே பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். என்னோட சின்ன வயசுலேந்தே கோலம் போடுறது, படம் வரையுறது, ஆடுறது, பாடுறதுன்னு எல்லாமே நல்லா பண்ணுவேன்.

எனக்குப் பன்னிரெண்டு வயசு இருக்குறப்பதான் திருநங்கைங்கின்றதே உணர ஆரம்பிச்சேன். பதினைந்து வயசு இருக்கும்போது சுத்தி உள்ளவங்கள்டையும் சொன்னேன். அவங்களால ஏத்துக்க முடியல. ஒரு கட்டத்துக்கு மேல என்னால ஆசிரமத்துல இருக்க முடியல. அங்கேருந்து வெளிய வந்து, பக்கத்துல இருந்த மற்ற திருநங்கைகள் கூட சேர்ந்து இருந்தேன்.

அப்போ, டிப்ளமோ படிச்சிட்டு இருந்ததுனால, காலேஜ் ஃபீஸ்ஸ ஆசிரமத்துல கொஞ்சம் கட்டுனாங்க. மீதிய நானே ஹோட்டல்ல வேலைக்குப் போயி கட்டுனேன். படிக்கும்போதே அடிக்கடி சென்னை வருவேன். படிச்சதுக்கு அப்பறம் சென்னை வந்து வேலை தேடிப் பார்த்தேன். படிச்ச படிப்புக்கும் இங்க வேலை கொடுக்கல.

ஏன் ஒரு சின்ன ஹோட்டல் வேலை கூட தரல. நான் திருநங்கைன்றதுனால, பஸ் ஸ்டாண்டுல பொது இடத்தில் தூங்குறது, பப்ளிக் பாத்ரூம யூஸ் பண்றதுன்னு நெறையா கஷ்டபட்டு இருக்கேன். பெயிண்ட் அடிக்கிறது, ஓவியம் வரையுறது, வீடு ரினோவேட் பண்றது, விஷேசங்களுக்கு அலங்காரம் பண்றதுன்னு கிடைக்கிற ஒவ்வொரு வேலையா செய்ய ஆரம்பிச்சேன்.

திருநங்கை ஸ்மிதா
திருநங்கை ஸ்மிதா

இப்ப வாடகை வண்டி எடுத்து ஸ்வீகி, சோமெட்டோல ஃபுட் டெலிவரி பண்றேன். விடியற்காலையில டீ விக்கிறேன். எண்ணூரில் சங்கிலிக் கருப்பர் ஆலயத்தில் தங்கி பூசாரியாக இருக்கேன்.

இதுல கிடைக்கிற வருமானத்துல என்னால முடிஞ்ச அளவுக்கு அனாதை குழந்தைகளுக்கும், முடியதவங்களுக்கும் செஞ்சிட்டு வரேன்'' என்றவரிடத்திடத்தில், இந்த வேலையின் அனுபவங்களைப் பற்றி கேட்டோம், "இந்த வேலைக்கு அப்ளே பண்றதுக்கு ஆண், பெண்ணுன்னு இரண்டே ஆஃப்சன் மட்டும் தான் இருந்துச்சே. நான் அலுவலகத்துல நேர்ல போயி பேசித்தான் இந்த வேலையே வாங்குன. நம்ம சாப்பாடு எடுத்துட்டு போனோம்னா, நீயான்னு கேட்டுட்டு காச மூஞ்சியிலேவிட்டு எரியிறது, முகத்தைச் சுழிகிறதுன்னு பல பேர் இருந்தாலும், அன்பா பேச ஒருசிலரும் இருக்காங்க.

ரொம்ப நேரம் காத்திருக்கிறது, எத்தனை அடுக்கு மாடியா இருந்தாலும் படி ஏறி போய் கொடுக்கிறதுன்னு இந்த வேலை ரொம்ப கஷ்டம்தான். கூடிய சீக்கிரம் நானும் ஒரு தள்ளு வண்டி கடை வச்சிட்டு ஒரு இடத்துல உக்காரணும்ன்னுதான் நினைக்கிறேன். திருநர்கள் எல்லாரும் கண்டிப்பா படிங்க .

திருநங்கை ஸ்மிதா
திருநங்கை ஸ்மிதா

நல்ல வேலைக்குப் போங்க. அப்பதான் மத்தவங்க நம்மள பத்தி தவறான நினைக்கிற கண்ணோட்டத்தை மாத்த முடியும். யாரும் வாய்ப்பு கிடைக்கலன்னு வருந்தபடாம மனம் தளராமா தொடர்ந்து முயற்சி செய்யயுங்க. படிச்சி முன்னுக்குப் வரணும்னு நினைக்கிற எங்களைப் போல உள்ளவங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அரசு சிறப்புப் பிரிவில் இடஓதுக்கீடு கொடுத்தா நல்லா இருக்கும் என்ற கோரிக்கையோடு முடித்தார்.

திருநங்கைகள் அனைவரையும் சக மனிதராக மதித்து நடக்க வேண்டும். யாசகம் கேட்கிறார்கள், பாலியல் வன்புணர்வில் ஈடுபடுகிறார்கள் என மட்டம் தட்டும் இந்தச் சமூகம் அவர்களுக்கான வேலை வாய்ப்பினை வழங்க மறுக்கிறது. சக மனிதரைப் போல் மேல ஏற விடாமல் தடுக்கிறது.

இப்படியான நிலையில் இவர்கள் தங்களின் திறமைகளை நிரூப்பிக்க திண்டாடுகிறார்கள். திருநங்கைகளை மனிதராக மதியுங்கள். அவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க முன் வாருங்கள்'' என்று கோரினார்.

குப்பையோடு போன 5½ பவுன் செயின்: தேடி எடுத்துக் கொடுத்த தூய்மை தேவதைகள்! - திருச்சி நெகிழ்ச்சி

திருச்சியில் இன்று 70 வயது மூதாட்டி குப்பையில் தவறவிட்ட 5 1/2 பவுன் நகையை, தூய்மைப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம், நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் சித்திரை வீதியைச் சேர்ந... மேலும் பார்க்க

எழுத்துகளின் நண்பன்! - பழைய பேனாக்களுக்குப் புத்துயிர் தரும் மதுரை தாத்தா

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோயில் அருகே, நவீன் பேக்கரி பக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பேனா விற்பனை செய்து வருகிறார் எட்டாம் வகுப்பு வரை படித்த சீனிவாசன் தாத்தா. சிறிய அளவில் தொடங... மேலும் பார்க்க

₹250 கடனுக்காகக் கொத்தடிமை... இன்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அலமேலு!

ஒரு காலத்தில் ₹250 கடனுக்காகத் தம்பியுடன் கொத்தடிமையாக வேலை செய்த சிறுமி... இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் மீட்டு, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தான் அனுபவித்த... மேலும் பார்க்க

“Hello Girls; “LM-ஓ AM-ஓ இல்லை”: ஆங்கிலம், செந்தமிழில் கலக்கும் 80 வயது வியாபாரி நாகப்பன் தாத்தா!

டஎன்னதான் ஆங்கிலத்தை அலசி ஆராய்ந்து படித்தும், பேசும்போது தடுமாறுபவர்கள் இங்கு நிறைய பேர். அப்படியே ஆங்கிலத்தை பேசினாலும் பிறகு தமிழ் பேசும்போது அயல் மொழியை கலந்து தமிழை தள்ளாட விடுவார்கள். ஆனால் 11 ஆ... மேலும் பார்க்க

50 ஆண்டு சம்பளத்தை புத்தகங்களுக்கே செலவிட்ட நடத்துனர்: 20 லட்சம் நூல்களுடன் இலவச நூலகம்!

2026 ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருது' பெற்ற 75 வயதான அங்கே கௌடாவின் கதை அமைதியான ,அதே சமயம் அசாதாரணமான சான்றாகத் தனித்து நிற்கிறது. கர்நாடகாவின் கிராமப்புறத்தில் ஒரு எளிய தொடக்கத்திலிருந்து, இந்தியாவின் மி... மேலும் பார்க்க

”உன்னோட கஷ்டத்தை நான் போக்குறேன்னு சொன்னான்; இன்னைக்கு அவனே இல்ல” - ஒற்றை மகனை இழந்த தாயின் கண்ணீர்!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி வீரலட்சுமி. வீரலட்சுமி, 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கந்தசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ... மேலும் பார்க்க