செய்திகள் :

`ஒருமுறை வெற்றிபெறுவது எளிது; ஆனால், அந்த வெற்றியைத் தக்கவைக்க..!' - விகடன் மேடையில் ஆர்.ஜே பாலாஜி

post image

`கருப்பு’ திரைப்படம் குறித்து, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில் ஆர்ஜே.பாலாஜி மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர், `` 'கருப்பு' படத்துக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. பொருளாதாரரீதியாகவும் வெற்றி. ‘கருப்பு’ படம் ரிலீஸ் ஆன பிறகு நான் பங்கேற்கும் முதல் ஸ்டேஜ் இதுதான் என்று நினைக்கிறேன்.

நாம் ஒரு விஷயத்துக்காக உண்மையாக உழைத்தால், அது நிச்சயம் கிடைக்கும். நாம் நினைக்கும் நேரத்தில் கிடைக்காவிட்டாலும் தள்ளிப்போயாவது அது கிடைக்கும்.

நாங்கள் ஒரு படம் பண்ணியிருக்கிறோம். அது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடவுள் மிகவும் கருணையுடன் இருந்திருக்கிறார்.

சாய் அபயங்கர் - ஆர்.ஜே.பாலாஜி
சாய் அபயங்கர் - ஆர்.ஜே.பாலாஜி

எனக்கும், சூர்யா சார், சாய் அபியங்கர், தயாரிப்பாளர்கள் என மொத்த டீமுக்கும் நாங்கள் நினைத்ததைவிட அதிகமாகவே கிடைத்திருக்கிறது.

சினிமாவில் ஒரு படம் பண்ணிட்டு காணாமல் போகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், இதே இடத்திலிருந்து தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு அடித்தளமாக நான் 'கருப்பு' படத்தைப் பார்க்கிறேன்.

உண்மையாக உழைத்து மக்களின் புத்திசாலித்தனத்தை நம்பினால் அது நிச்சயம் கைகொடுக்கும் என்பதற்கு இந்தப் படம் எனக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்துவிட்டது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் காட்டிய அன்புக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று இந்தப் படத்துக்கு 50-வது நாள்.

ஒருமுறை வெற்றிபெறுவது எளிது. ஆனால் அந்த வெற்றியைத் தக்கவைக்க, தேவையான ஆற்றலை இந்த வரவேற்பு தருகிறது. மிகவும் பணிவாக இந்த வெற்றியை ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

இதயம் முரளி: "தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம்தான்!" - கயாடு லோஹர்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான படம் 'இதயம் முரளி'. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலை... மேலும் பார்க்க

அன்பே டயானா விமர்சனம்: சாதியத்தை உடைக்கும் அன்பான அடாவடி காதல்; காமெடி கைகொடுக்கிறதா?

பெரம்பூரில் வசித்து வரும் சிருமாமில்லா சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்) குழந்தைகளுக்கான தடகளப் பயிற்சியாளராக இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் (ரம்யா ரங்கநாதன்) மீது கி... மேலும் பார்க்க

கருணாஸ் தயாரிப்பில் கென் கருணாஸ்; வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கென்! | Exclusive Update

'யூத்' படத்தின் மூலம் இயக்குநராக, ஹீரோவாக கவனம் ஈர்த்தவர் கென் கருணாஸ். அந்தப் படத்தை அடுத்து சத்தமில்லாமல் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ராஜன் வகையறா'வில் நடித்து வருகிறார். காதலும், ஃபேமிலி சென்டிமென்ட... மேலும் பார்க்க

காக்க காக்க : காவலின் காதல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 07

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!`சினி'ஸ்கோப் 07காக்க காக்க : காவலின் காதல்!கேங்ஸ்டர் சேது செங்கல்பட்டு ரயில்வே ... மேலும் பார்க்க

அன்பே டயானா: "படத்தின் கடைசி 20 நிமிடம், தமிழ் சினிமாவின் பெஸ்ட்டான..!" இயக்குநர் ராம் பாராட்டு

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

Arasan: ஸ்லிமான சிலம்பரசன், ஈ.சி.ஆரில் பிரமாண்ட வடசென்னை செட்; மீண்டும் ரெடியாகும் 'அரசன்'- அப்டேட்

வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தக... மேலும் பார்க்க