செய்திகள் :

"ஆய்வுக் கூட்டம் என யாராவது அழைத்து அதிகாரிகள் பங்கேற்றால் சம்மன்" - எம்.பி. சு.வெங்கடேசன்

post image

'வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்' என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்ததோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டமும் நடத்தினர். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டதற்காக மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் நிர்மல்குமார் ஆகியோர்  கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றுன் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன், "நேற்றைய தினம் மதுரை வந்த ஆளுநர் அர்லேகர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததாக செய்திகளில் வந்திருந்தது. ஆய்வு நடக்கவில்லை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தோம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நான் அதற்குள் போக விரும்பவில்லை ஆனால் இரு விஷயத்தை மட்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்யும் சட்ட உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. சட்டம் வழங்கியிருக்கிற அந்தக் குழுவின் (மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைல்பு மற்றும் கண்காணிப்புக் குழு) தலைவர் நான். உறுப்பினர்கள் இங்கே இருக்கிறார்கள்.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

பல துறைகளில் ஆய்வு செய்வதற்கு சட்டம் எங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறது. எங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டு தர மாட்டோம். ஒருவேளை அப்படி யாராவது ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரியையாவது அழைத்தால் யாரும் பங்கேற்கக் கூடாது. அப்படி பங்கேற்றால் அவர்களுக்கு சம்மன் அனுப்பட்டு விளக்கம் கேட்கபடும்.

அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற 39 அமைச்சர்களுக்குக் கீழ் வருகிற 96 துறைகளையும் ஆய்வு செய்கிற பொறுப்பு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்குத்தான். இது மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் வேலை செய்கிறது" எனத் தெரிவித்தார். 

கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்; தண்டனை குறைப்பு செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கி படுகொலை செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சின்வாரா நீதிமன்றம் சிவாவிற்கு ஆயுள் தண்டனை ... மேலும் பார்க்க

`அதிமுகவில் நான் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை!’ - சி.வி.சண்முகம்

த.வெ.க அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்பு... மேலும் பார்க்க

`தவெக-வில் இணையச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்!'- கைதான அனிதா ராதாகிருஷ்ணன் `பகீர்' குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த 20-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிர... மேலும் பார்க்க

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தற்போதுதான் தொடங்கியிருக்கின்றன. அ... மேலும் பார்க்க

`கடும் வேதனையளிக்கிறது; விசாரணையை நம்புகிறோம்!' - அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடல் குறித்து RSS

அயோத்தி ராமர் கோயிலில் நடந்துள்ள நன்கொடை கையாடல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கும் இந்தக் கோயிலில் அரங்கேறியுள்ள இந்தச்... மேலும் பார்க்க

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க