செய்திகள் :

சென்னை: சிறுமி கடத்தலைத் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்; நேரில் அழைத்து பாராட்டிய DGP!

post image

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ். இவர் திருச்சியில் விவசாய வேலை முடித்துவிட்டு, தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புவதற்காகக் கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார்.

ரயில் நிலைய கோச் ரெஸ்டாரன்ட் எதிரே குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜூலை 2 அதிகாலை 3.00 மணியளவில் அங்கு வந்த பொன்னேரியைச் சேர்ந்த சசிகுமார் (42) என்பவர், தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியைத் திடீரென தன் தோளில் தூக்கிச் சென்றுள்ளார்.

குடிபோதையில் தள்ளாடியபடி சென்ற சசிகுமார் மற்றும் அச்சிறுமி இருவரும் வெவ்வேறு மொழிகளில் (தமிழ் மற்றும் இந்தி) பேசியதை அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் கவனித்தார்.

கடத்தல்

சந்தேகமடைந்த அவர், உடனடியாகச் செயல்பட்டு சசிகுமாரை மடக்கிப் பிடித்து, ரோந்துப் பணியில் இருந்த எலிபெண்ட் கேட் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார் மற்றும் இரவு ரோந்து ஆய்வாளர் தேவி ஆகியோர் சசிகுமாரைக் கைது செய்து, சிறுமியைப் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சசிகுமார் கடந்த 3 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்வது தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநர் முருகனின் இந்தத் துரிதமான செயலைப் பாராட்டி, கூடுதல் டி.ஜி.பி. அன்பு, ஐ.ஜி. பவானீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அவருக்குப் பாராட்டுத் சான்றிதழும் வெகுமதியும் வழங்கினார்.

காரில் லேசாக உரசிய பைக்; போலீஸ்காரரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த பைக் கும்பல்; பின்னணி என்ன?

நாக்பூரில் பைக்குகளில் வந்த கும்பல் ஒன்று போலீஸ்காரரின் காரை வழிமறித்து, அவரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்... மேலும் பார்க்க

திருவிழா மேடையில் திடீரென மயங்கி விழுந்த நடனக் கலைஞர் உயிரிழப்பு; ரசிகர்கள் சோகம்

கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா. இவர் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடனமாடி வந்தார். இந்நிலையில், கரூர் அருகே தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க

'பணி நேரத்தில் மதுபோதை; அலுவலகத்தில் படுத்துறங்கிய அவலம்!' - துறையூர் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக (VAO) சின்னத்தம்பி பணியாற்றி வருகிறார். இவர், பணிநேரத்தில் மது போதையில் இருக்கும் ... மேலும் பார்க்க

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கு; சோனம் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

மேகாலயாவிற்கு கடந்த ஆண்டு தேனிலவு சென்றபோது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக சோனம் ரகுவன்ஷியும், அவரது காதலன் ராஜ் சிங் குஷ்வா... மேலும் பார்க்க

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட கணவர்; விபரீத முடிவெடுத்த மனைவி - திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31) இவரது மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `கோயில் புதுபிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்' - தோழியுடன் இணை ஆணையர் கைது!

தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்தின் அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது தோழி கிரிஜா. ஜோதிலட்சுமி கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம், கோயில் ... மேலும் பார்க்க