செய்திகள் :

'ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!'- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்

post image

சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், " 'பெரியார் அறிவுலகம்' என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற 'அகல்விளக்கு' பதிப்பகத்தின் போலிப் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கின்றன.

அந்தத் தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய வேண்டுமென்றால், 'மகாபெரியவா' புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும், அனைத்துப் பெரியார் அறிவுலக நூலகங்களின் அடுக்குகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் இந்தப் பாவமெல்லாம் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்" என்று பேசியிருந்தார்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்

நீதிபதியின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் விவாதமானது. இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``"பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என்று விமர்சித்திருந்தார்.

எம்.பி சு.வெங்கடேசன்
எம்.பி சு.வெங்கடேசன்

இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், "நகைச்சுவையாக நான் கூறிய விசயத்திற்கு என் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். நான் ரயில் நிலையம் செல்லும்போது உயர் ரக காரில் ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். யாரோ என நினைத்தபோது சு.வெங்கடேசன் உயர் ரக காரில் ஆடம்பர உடையில் இறங்கினார். ரயிலில் சு.வெங்கடேசன் முதல் வகுப்புக்குச் செல்ல, நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன்" என்று சு. வெங்கடேசனை விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்த சட்டம் அனுமதி அளிக்கிறது?" - அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில், நள்ளிரவில் ஆய்வுக்கு சென்று பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத... மேலும் பார்க்க

'முதல்வர் தலைமையில் அமைச்சருக்கு டும் டும் டும்; டென்ஷன் மோடில் பொதுச் செயலாளர்!' - தவெக அப்டேட்ஸ்!

துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் என சர்ச்சைகளில் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது தவெக அரசு. இந்நிலையில், தவெக கட்சிக்குள் என்ன நடக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம். பர்வ... மேலும் பார்க்க

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு - கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான 11 வயது இமானுவேல் மற்றும் ஒன்பது வயது ஷாம் ஆபிரகாம் இருவரும், தோட்டப்பாடி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு நே... மேலும் பார்க்க

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதால், அதை காரணம் காட்டி இளமின் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில் நள்ளிரவில் உள்ளே சென... மேலும் பார்க்க