செய்திகள் :

`ஒரு நாள் விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி?'- அதிகரிக்கும் இளம் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி செல்வாக்கு

post image

15 வயதில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ், கடந்த ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து உச்சத்தை தொட்டு இருக்கிறது. அவருக்கு இந்திய அணியில்கூட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு விளம்பர வாய்ப்புகள் அதிக அளவில் வருகின்றன. பாலிவுட் பிரபலங்களுக்குக்கூட கிடைக்காத வரவேற்பு வைபவிற்கு கிடைத்து வருகிறது. இதனால், அடுத்தடுத்து விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஒரு நாள் விளம்பர படப்பிடிப்புக்கு லட்சங்களில் வாங்கிக்கொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷி, இப்போது ஒரு நாளைக்கு ரூ.2 கோடி வரை வாங்க ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம் மட்டுமல்லாது எதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் ரூ.1.5 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சூரியவன்ஷியின் வயது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஒரு மைனர் என்பதால், அவரால் தனிப்பட்ட முறையில் விளம்பர ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. எனவே, ஒப்பந்தங்களைச் செயல்படுத்த அவருக்கு ஒரு பாதுகாவலர் தேவைப்படுகிறார்.

சூரியவன்ஷியின் வணிக விவகாரங்களை நிர்வகிக்க தற்போது முறையான ஏஜென்சி எதுவும் இல்லை. அவரது குடும்பத்தினர் அவரது விளம்பர ஒப்பந்தங்களை கவனித்துக்கொள்கின்றனர். இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. ஐ.பி.எல் தொடரில் சிறப்பான அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாகவே அவர் பல்வேறு வணிக ஒப்பந்தங்களைப் பெற்றுவிட்டார்.

ஐ.பி.எல் போட்டிக்குப் பிறகு அவரது வணிக மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிக வருமானம் தரும் விளம்பர ஒப்பந்தங்கள் அவரது கிரிக்கெட் வளர்ச்சியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியவன்ஷியின் அசுர வளர்ச்சிக்கு கிரிக்கெட் களத்தில், குறிப்பாக 2026 ஐ.பி.எல் தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. இத்தொடரில் அவர் அதிகம் பேசப்பட்ட இளம் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். வணிக ரீதியாகவும், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையான ஓர் இடத்தைப் பெறும் அளவிற்கு அவர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

'ஆடையின்றி கவர்ச்சி விளம்பரம்' - சிட்னி ஸ்வீனிக்கு எதிராக ஒன்று கூடும் விளையாட்டு வீராங்கனைகள்!

பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி 'நோவிக்' என்கிற ஸ்போர்ட்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் ஆடைகளின்றி விளையாட்டு வீராங்கனை பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் இந... மேலும் பார்க்க

'வரலாறு படைத்த தீரஜ் பொம்மதேவரா' - வில்வித்தை உலகக்கோப்பையில் தங்கம் வென்று அசத்தல்!

2026 வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மெக்சிகோவின் சால்டிலோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா வெற்றி பெற்றார். ... மேலும் பார்க்க

4 வயதில் நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev

“உன்னால் முடியாது” என்ற வார்த்தைகள் ஒரு குழந்தையின் கனவை முடக்கிவிடலாம். ஆனால், அந்த வார்த்தைகளையே தாண்டி இன்று உலக டென்னிஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ஜெர்மனி வீரர் Alexander Zverev.2026 US Open ஆ... மேலும் பார்க்க

தேசிய கீதத்துக்கு முன் வந்தே மாதரம் - இந்தியா, ஆப்கன் போட்டியில் நடந்த மாற்றம்!

இந்தியா–விளையாடும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஆட்டத்தின் மீதுதான் இருக்கும். ஆனால், டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பே, மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வு அன... மேலும் பார்க்க

'48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன?

லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த 'Michelin Le Mans Cup' கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொட... மேலும் பார்க்க

தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டு? எதை நோக்கி செல்கிறோம்?

சமூக வலைதளங்களில் ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை சாதனைகளைப் படைக்கும்போது, அந்த வெற்றிகள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகின்றன என்பது பல நேரங்களில் அவர்களின் திறமையை மையப்படுத்தியதாக மட்டும் இருப்பதில்லை... மேலும் பார்க்க