செய்திகள் :

ஒரு படம் ஹிட் ஆக BGM முக்கியமா? - ஹைப் மெஷின் ஆக மாறும் இசையமைப்பாளர்கள்!

post image

பாடல் கேசட்டுகள் ஒருகாலத்தில் திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றின. திரைப்படப் பாடல்களைப் பார்ப்பதற்காகவே தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. அதன் பிறகு நாளடைவில் பாடல்களின் வெற்றி மட்டும் படத்தின் வெற்றியாக மாறுவது குறைந்தது. பாடல்கள் படத்திற்கான மிக முக்கியமாக ப்ரோமோஷன் மெட்டீரியலாக அமைந்தது. அதன் பிறகு திரைப்பட ப்ரோமோஷனில் ஒரு படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் மட்டுமே முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் சமீப காலகட்டத்தில், இசையமைப்பாளர்கள் ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவையான `ஹைப்' (Hype) உருவாக்கும் `ஹைப் மெஷின்' ஆக மாறியுள்ளனர்.

ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்
ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்

சமீபத்தில் வெறும் க்ளிம்ப்ஸ்காக வெளியான நானியின் `தி பாரடைஸ்' படத்தின் BGM ஹிட் அடித்தது நினைவிருக்கலாம். படத்தின் கதை என்னவென்று சொல்வதற்கு முன்பே, இசையமைப்பாளர்கள் அந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை (BGM) குறித்த சிறு துணுக்குகளை (Glimpse) வெளியிடுகின்றனர். ஸ்டுடியோவில் அவர்கள் இசையமைக்கும் போது எடுக்கப்படும் `பிஹைண்ட் தி சீன்ஸ்' (BTS) வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. இது சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைப் பெறுகிறது.

முன்னணி இசையமைப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட பக்கங்களில் போடும் ஒவ்வொரு பதிவும் (உதாரணமாக: `இன்று ஒரு பெரிய மேஜிக் நிகழப்போகிறது’, `இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு’ போன்ற வாசகங்கள்) அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்
ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்

தற்போது ஒரு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஹிட்டானால் மட்டுமே, அந்தப் படத்திற்குப் பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் இயக்குநர்களைவிட இசையமைப்பாளர்களைத் தான் `ப்ரோமோஷன் கிங்' ஆகப் பார்க்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், `படம் நல்லா இருக்கோ இல்லையோ அதைத் தாண்டி, பிஜிஎம் வேற லெவல்ல இருந்தா போதும்’ என்ற ரசிகர்களின் மனநிலையைத் தான் இப்போது சினிமா உலகம் முதலீடாக மாற்றிக் கொள்கிறது.

இன்றைய பாடல்கள் முழுமையாக ரசிக்கப்படுவதை விட, இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் தளங்களுக்கு ஏற்றவாறு 15 முதல் 30 நொடிகள் கொண்ட `ஹூக்' வரிகளைக் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன. இந்தச் சிறிய பகுதி வைரலாகும் போது, அந்தத் திரைப்படம் ஒட்டுமொத்தமாகப் பெரிய வரவேற்பைப் பெற்றுவிடுகிறது.

ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்
ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்

நன்மைகள்:

  • சிறிய பட்ஜெட் படங்கள் கூட நல்ல இசை மற்றும் புரோமோஷன் மூலம் பெரிய வெற்றியை அடைய முடிகிறது.

  • இசையமைப்பாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் ஊதியம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சவால்கள்:

  • பாடல்களின் ஆயுட்காலம் குறைந்துவிட்டது. 30 நொடிகள் ரீல்ஸுக்காக இசையமைக்கப்படும் போது, முழுமையான இசைக்கோப்பின் தரம் சில நேரங்களில் குறைய வாய்ப்புள்ளது.

  • இசை என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை என்பதிலிருந்து மாறி, ஒரு வணிகப் பொருளாக மட்டும் சுருங்கிவிடும் அபாயம் உள்ளது.

ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்
ஹைப் மெஷின் இசையமைப்பாளர்கள்

இன்றைய காலகட்டத்தில் ஒரு இசையமைப்பாளர் என்பவர் வெறும் இசையைத் தருபவர் மட்டுமல்ல; அவர் அந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய `ஸ்ட்ரேட்டஜிஸ்ட்' ஆகவும் மாறியிருக்கிறார் என்பதே உண்மை.

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க