செய்திகள் :

மேஜர் ரவி முதல் அஞ்சலி நாயர் வரை! - கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கும் திரைப்பிரபலங்கள்

post image

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி வரையிலான நிலவரப்படி, 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர்கள் பலரும் புதிதாக அரசியலுக்குள் களமிறங்குவார்கள்.

அரசியல் கட்சியின் விடுக்கும் அழைப்பின் காரணமாக நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருவார்கள்.

Kerala Assembly Elections
Kerala Assembly Elections

இல்லையெனில், மக்களிடம் இருக்கும் பிரபலத்தின் மூலம் வாக்கு சேகரித்துவிடலாம் என்கிற ஆர்வத்துடனும் சிலர் வருவார்கள்.

அப்படி இம்முறையும் நடிகர்கள் பலரும் புதிதாக களமிறங்கி, தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். அவர்கள் யார் யார்? எந்தெந்த தொகுதியில் அவர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள் என்பதை இங்குப் பார்ப்போமா...

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் டிவெண்டி 20 கட்சி இம்முறை நான்கு சினிமா பிரபலங்களையும் ஒரு சோசியல் மீடியா பிரபலத்தையும் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது.

இக்கட்சி சார்பாக, தாமரை சின்னத்தில் திருப்பூணித்துரா தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார் நடிகை அஞ்சலி நாயர். நடிகை லக்ஷ்மி ப்ரியா, பெரும்பாவூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்.

நடிகை வீணா நாயர் எட்டுமானூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். சோசியல் மீடியா பிரபலமான ப்ரோமி குரியாகோஸ் அங்கமாலி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்.

Major Ravi - Mohanlal
Major Ravi - Mohanlal

முன்னாள் ராணுவ அதிகாரியும், திரைப்பட இயக்குநருமான மேஜர் ரவி இம்முறை தேர்தல் அரசியலுக்குள் குதித்திருக்கிறார். பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒட்டப்பாலம் தொகுதியில் இவர் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார்.

பிரபல நகைச்சுவை நடிகரான ரமேஷ் பிஷாரடி காங்கிரஸ் சார்பாக பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். நடிகர் சுதீர் கரமனா, இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகத் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டிருக்கிறார்.

இவர்களைத் தாண்டி சில பிக் பாஸ் பிரபலங்கள், தொலைக்காட்சி முகங்களிலும் இம்முறை கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள்.

Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

Patriot: "நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து நடித்ததற்கான காரணம்?!" - மம்மூட்டி

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன்... மேலும் பார்க்க

தென்னிந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் டாப் 4 Gen Z மலையாள நாயகிகள்!

யதார்த்தமான கதைகள், உணர்வுப்பூர்வமான நடிப்பு - இதுதான் மலையாள சினிமாவின் அடையாளம். ஆனால் இன்று அந்த அடையாளத்தைத் தாண்டி, சமூக வலைத்தளங்களின் ரீல்ஸ் முதல் தியேட்டர் ஸ்கிரீன் வரை தென்னிந்திய ரசிகர்களின்... மேலும் பார்க்க

"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாள்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க