செய்திகள் :

`ஜெயலலிதா டு விஜயகாந்த்' - தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களைத் தோற்கடித்த வேட்பாளர்கள் யார் யார்?

post image

தமிழக அரசியலில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் பெரும் வெற்றி பெற்றாலும், பல முன்னணித் திரை நட்சத்திரங்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தும் தேர்தல் களத்தில் அதிர்ச்சித் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களைத் தோற்கடித்த வேட்பாளர்கள் யார் யார்?

சிவாஜி கணேசன்

* தமிழகத்தின் 'நடிகர் திலகம்' என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார். தனது சொந்தக் கட்சியான 'தமிழக முன்னேற்ற முன்னணி' சார்பில் போட்டியிட்ட அவர் வளர்ந்து வந்த தி.மு.க வேட்பாளர் துரை சந்திரசேகரனிடம் தோல்வியடைந்தார்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

டி. ராஜேந்தர்

* லட்சிய தி.மு.க என்ற கட்சியை ஆரம்பித்த டி. ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை பூங்கா நகரில் போட்டியிட்டார். இவரை அ.தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எஸ். செல்வராஜ் தோற்கடித்தார்.

சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற டி.ஆரால் அரசியலில் நிலையான வெற்றியைப் பெற முடியவில்லை.

ஜெயலலிதா

* திரையுலகில் இருந்து வந்து முதல்வரான ஜெயலலிதா, 1996-ம் ஆண்டு தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு யாரும் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்தார். 1991 முதல் 1995 வரை தமிழகத்தை ஆட்சி செய்த ஜெயலலிதா மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அந்த எதிர்ப்பு அலையால் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியைத் தழுவினார்.

விஜயகாந்த்

* 2011-ல் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த விஜயகாந்த், 2016 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அவரை அ.தி.மு.க வேட்பாளர் இரா. குமரகுரு தோற்கடித்தார். இந்தத் தேர்தலில் விஜயகாந்த் அவர்கள் டெபாசிட் இழந்தது திரையுலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

சரத்குமார்

* 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி'யைத் தொடங்கிய சரத்குமார் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை தி.மு.க-வின் மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் தோற்கடித்தார். 2024-ல் சரத்குமார் தனது கட்சியைப் பா.ஜ.க-வுடன் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன்

* மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த அவர், இறுதிச் சுற்றில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தது பெரிய விவாதமானது.

குஷ்பு சுந்தர்

* திரையுலகின் முன்னணி நாயகியாக இருந்த குஷ்பு அரசியலுக்கு வந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு 2021-ல் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை தி.மு.க வேட்பாளர் எழிலன் நாகநாதன் தோற்கடித்தார்.

குஷ்பு
குஷ்பு

சீமான்

* திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான், நாம் தமிழர் கட்சி 2010 ஆம் ஆண்டு தொடங்கினார். முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு கடலூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க-வின் எம்.சி. சம்பத்திடம் தோல்வி அடைந்தார். தவிர 2021 ஆம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் தி.மு.க-வின் கே.பி. சங்கரிடம் தோல்வியைத் தழுவினார்.

`கடந்த 5 ஆண்டுகளில் 8,900 கொலைகள்; தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை' - பியூஷ் கோயல்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் என்.டி.ஏ கூட்டணிக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர... மேலும் பார்க்க

TVK: ``நானா துரோகி..? ரூ.5000 கோடி மதிப்பில் 2 தொழிற்சாலை கட்டிவருகிறார் எடப்பாடி!" - செங்கோட்டையன்

விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5000 கோடி ரூபாய் சம்பாதிக்கத் திட்டமிட்டார் எடப்பாடி பழனிசாமி என செங்கோட்டையன் விமர்சித்திருக்கிறார்.ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட... மேலும் பார்க்க

மது போதையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிய 4-ம் வகுப்பு மாணவன்; `மது விலக்கு' பீகாரின் அவலம்!

அறிவொளி ஏற்ற வேண்டிய பள்ளிக்கூடமே, சட்டவிரோத மதுபானங்களைக் குவித்து வைக்கும் கிடங்காக மாறிய அவலம், பீகாரில் அரங்கேறியுள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் மது அருந்தி மயங்... மேலும் பார்க்க

"திமுக தேர்தல் அறிக்கையில் ஒரே ஒரு இடத்தில்கூட அதைப் பற்றிச் சொல்லவில்லை" - காரணம் சொல்லும் சௌமியா

"பெண்கள் பாதுகாப்பு தமிழ்நாட்டில் முற்றிலுமாக இல்லை. பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள், ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது..." என்று தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேசியுள்ளார்.வ... மேலும் பார்க்க