செய்திகள் :

``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு..." - சு.வெங்கடேசன்

post image

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது.

அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள ஒரு தலைப்பில், நாடாளுமன்ற விதிகளுக்கும் மரபுகளுக்கும் புறம்பாக ஒன்றிய அமைச்சகம் இப்படி நிகழ்வுகளை நடத்துவது அதிகார வரம்பை மீறும் செயலாகும் எனவும் குறிப்பிட்டு மக்களவை சபாநாயகருக்கும் இளைஞர் நலன் அமைச்சகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இது குறித்துப் பதிவிட்டிருக்கும் அவர், "வெற்றி! 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாளை கல்லூரிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பானது எனச் சபாநாயகர், அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

சு வெங்கடேசன்
சு வெங்கடேசன்

இந்நிலையில் நாளை நடக்கவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை ரத்து செய்து கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ராணியின் நினைவாக உருவான `ராணிப்பேட்டை' - ரூ.2.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராஜா – ராணி மண்டபம்!

300 ஆண்டுக்கால வரலாற்றுச் சின்னம்... காலத்தின் சுவடுகளைப் பாதுகாக்க நடைபெறும் புனரமைப்புப் பணிகள்!ஓர் ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கும். சில ஊர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஒரு மன்னரின்... மேலும் பார்க்க

Roamie: `பண்டிகைக் கால ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள்'- தீர்வு தருமா ரோமி செயலி?

பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணம். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளின் சங்கங்களே கேட்டுக்கொண்டாலும், இதுவரை எந்த மாற்ற... மேலும் பார்க்க

இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் செக் செய்வதை எளிமையாக்கியிருக்கிறது அதன் அமைப்பு. இனிமேல் EPFO வலைதளம் அல்லது UMANG ஆப்பிற்குள் சென்று பேலன்ஸ் பார்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய வ... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க

நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்... தவித்த பயணிகள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்... மேலும் பார்க்க

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்!

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள்... மேலும் பார்க்க