செய்திகள் :

"ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000" - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி,

எடப்பாடி பழனிசாமி

* பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும்.

* 12 ஆம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

* மக்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 தரப்படும்.

* நகரப்பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி

* மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.8000 இருந்து 12,000 மாக உயர்த்தி வழங்கப்படும்.

* விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி ... மேலும் பார்க்க

விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த விஜய்க்கு வழிநெடுக த.வெ.க தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர்.வெட்... மேலும் பார்க்க

`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்... எங்கள் இலக்கு.!' - தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன... மேலும் பார்க்க

பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் ப... மேலும் பார்க்க