செய்திகள் :

`கட்சியை காங்கிரஸில் இணைத்து விடுவார் என்ற அச்சத்திலேயே' - தாக்கரேவிடமிருந்து பிரியும் எம்.பி-க்கள்

post image

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த மொத்தமுள்ள 9 எம்.பி-க்களில் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவியுள்ளனர். நேற்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் இந்த 6 எம்.பி-க்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷைச் சந்தித்து தங்களை தனி அணியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தபோது, அவர்களில் சிலர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் உத்தவ் தாக்கரே தரப்பில் ஏற்பாடு செய்த கூட்டதிலும் அந்த சில எம்.பி-க்கள் கலந்து கொள்ளவில்லை.

அணி மாறிய 6 மக்களவை எம்.பி-க்களுக்கும் மாநில அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது. இது குறித்து சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத் அளித்துள்ள பேட்டியில், ``துரோகிகளை மாநில அரசு பாதுகாக்கிறது.

உத்தவ் தாக்கரே

அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? கோபத்தில் இருக்கும் சிவசேனா தொண்டர்களிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவர்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு போதுமானது கிடையாது. அவர்களுக்கு விமானப்படை பாதுகாப்பு கொடுக்கவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

மக்களவை எம்.பி.க்கள் சஞ்சய் தினா பாட்டீல் (மும்பை வடகிழக்கு), சஞ்சய் தேஷ்முக் (யவத்மால்-வாஷிம்), சஞ்சய் ஜாதவ் (பர்பானி), பவுசாஹேப் வக்சௌரே (ஷிர்டி), நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் (ஹிங்கோலி) மற்றும் ஓம் பிரகாஷ் ராஜேனிம்பல்கர் (உஸ்மானாபாத்) ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாநில உளவுத்துறை வெளியிட்ட தகவல்களின்படி, அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த முறை 2022ம் ஆண்டு சிவசேனாவில் பிளவு ஏற்பட்டபோது இந்துத்துவா கொள்கையை கைவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக பிரிவதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது 6 எம்.பி.க்களும் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்திருக்கும் கடிதத்தில், சிவசேனாவை உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துவிடுவார் என்ற அச்சம் இருப்பதால் தாங்கள் தனி அணியாக வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

சபாநாயகர் அவர்களை தனி அணியாக அறிவித்த பிறகு அவர்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் முறைப்படி இணைவார்கள். நேற்று 5 எம்.பி-க்கள் தனி விமானத்தில் ஜெய்ப்பூர் சென்று சபாநாயகரை ஹோட்டலில் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

25 கவுன்சிலர்களும் தாவுகின்றனர்

மும்பை மாநகராட்சியில் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த 25 கவுன்சிலர்கள் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு தாவ தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் 25 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே எம்.பி.க்கள் பிரிந்துவிட்ட நிலையில், அடுத்து எம்.எல்.ஏ.க்களும் பிரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 16 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சிக்கு தாவ தயாராக இருப்பதாக செய்திகள் வெளியானது. இப்போது மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களும் உத்தவ் தாக்கரேயை கைவிட தயாராகி வருவதாக தெரிகிறது.

இது குறித்து சிவசேனா(ஷிண்டே) நிர்வாகி அமெய் கோலே கூறுகையில், ''எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமையை சந்திக்க போதிய வாய்புகள் கிடைக்கவில்லை. இதுவே உத்தவ் கட்சி அதிருப்திக்கு முக்கிய காரணம். சிவசேனா(உத்தவ்)வில் மூன்றில் இரண்டு பங்கு கவுன்சிலர்களை தங்களிடம் கொண்டு வருவதற்கு சிவசேனா ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கவுன்சிலர்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' - அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ வேலு முன்வைத்த விமர்சனம் ஒன்றிற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார்... மேலும் பார்க்க

சட்டசபையில் டாபிக் ஆன இயக்குனர் `அட்லி' - வித்தியாசமாக விமர்சனம் செய்த எம்.எல்.ஏ சிவசங்கர்!

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் டைரக்டர் அட்லியை இழுத்து அரசை விமர்சனம் செய்திருந்தார். ச... மேலும் பார்க்க

அவையில் உதயநிதி வைத்த கோரிக்கை.! `கூடுதல் பத்தியாகச் சேர்க்கலாம்' - உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

`எல்லையற்ற அதிகாரம் படைத்தவன்' - ஈரான் நிபந்தனையின்றி சரணடைந்ததாக சொல்லும் டொனால்டு ட்ரம்ப்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் தனது நாட்டின் எல்லைக்கு உட்பட்ட ஹார்மூஸ் ஜலசந்தியை முழுமையாக போக்குவர... மேலும் பார்க்க

`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் ராஜதந்திர மற்றும் ராணுவ உதவிகளை இஸ்ரேல் தலைவர்கள் மதிக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கத் த... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ` ஒரு முக்கியமான வேண்டுகோளை வைக்கிறேன்.!' - உதயநிதி ஸ்டாலின் உரை

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க