Mandaadi: ``முதல் படத்தில் எங்கையோ ஓர் ஓரத்தில் இருந்தவர் இன்று..!"- சூரியைப் பு...
கட்டாய PF வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு; நீங்கள் பயன்பெறுவீர்களா? தெரிஞ்சுக்கோங்க!
PF விஷயத்தில் ஒரு ‘குட் நியூஸ்’ சொல்லியுள்ளது மத்திய அரசு.
PF - புதிய அறிவிப்பு
நேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளில் ஊதிய வரம்பு ரூ.15,000-லிருந்து மாத ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது” என்று அறிவித்தார்.
அதாவது, இதுவரை ஊதிய வரம்பாக ரூ.15,000 வரை பெற்றவர்களுக்குச் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி கழிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இனி நேற்றைய அறிவிப்பின்படி, ஊதிய வரம்பாக ரூ.25,000 வரை பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கட்டாயமாகக் கழிக்கப்படும்.

விளக்கமாக...
ஓய்வுக்காலத்திற்குள் என்ட்ரியாகும் போது, மக்களிடம் பணம் இருக்க வேண்டும். அந்த ஓய்வுக்காலத்தை நிதி சிக்கலில்லாமல் கழிக்க வேண்டும் என்பதற்காகச் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படுவதுதான் இந்த வருங்கால வைப்பு நிதி.
இந்தப் பிடித்தத்திலும் சில சட்டத் திட்டங்கள் உள்ளன.
அதன்படி, 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ரூ.15,000 வரை ஊதிய வரம்பு பெறுபவர்களுக்கு மட்டுமே கட்டாயமாகப் பிஎஃப் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
அதற்கு மேலான ஊதிய வரம்பெல்லாம் சாய்ஸ் அடிப்படையிலானதுதான்.
ஆனால், நேற்று முதல், ரூ.25,000 வரை ஊதிய வரம்பு பெறுபவர்களுக்கும் கட்டாயம் பிஎஃப் பிடித்தம் செய்ய வேண்டும்.
இந்தப் புதிய அறிவிப்பு கூடுதலாக 51 லட்சம் மக்களைப் பயனடையச் செய்ய உதவும் என்று மத்திய அரசு கூறுகிறது.

















