செய்திகள் :

கட்டுப்பாட்டை இழந்து, 8 பேர் உயிரை காவு வாங்கிய அரசு பேருந்து; சேலத்தை உலுக்கிய சோகம்- என்ன நடந்தது?

post image

கோவையில் இருந்து இன்று காலை பயணிகளுடன் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து,‌ உத்தம சோழபுரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியிருக்கிறது. எதிரில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தி, அருகில் உள்ள சாலை தடுப்பு மீது மோதி நின்றிருக்கிறது.

சேலம் வாகன விபத்து

கட்டுப்பாட்டை இழந்த அந்த அரசுப் பேருந்து ஏற்படுத்திய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் மற்றும் சரக்கு வாகனத்தில் சென்ற பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 6 பேர் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயங்களுடன் உயிர் தப்பிய 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "நண்பகல் 12 மணியளவில் உத்தம சோழபுரம் அருகில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சாலையில் ஓடிய பேருந்தால் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

சேலம் வாகன விபத்து

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்து பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நடத்துநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

நீலகிரி: 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்; ராணுவ உதவியுடன் விடிய விடிய போராடி மீட்பு - திக் திக்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவகுருநாதன். கடந்த 13 - ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இவர், தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு... மேலும் பார்க்க

அதிகாலை துயரம்: ஒடிசா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்து 10 நோயாளிகள் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைத்த... மேலும் பார்க்க

நாவலூர்: அதிகாலை நேர்ந்த கோரம்; சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலியான சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பு ஒன்றில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக அந்த வீடு முற்ற... மேலும் பார்க்க

கரூர்: கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்; 23 மாணவர்கள் காயம்; ஆளில்லாத லெவல் கிராசிங்கால் விபத்து

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 23... மேலும் பார்க்க

யானை - மனித எதிர்கொள்ளல்: வீட்டுக்கு சென்ற வழியில் சிக்கிய நண்பர்கள் - இருவரும் உயிரிழந்த சோகம்

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முக்கிய இடத்தில் இருக்கிறது. குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை - மனித எதிர்கொள்ளல்களின... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ... மேலும் பார்க்க