செய்திகள் :

அதிகாலை துயரம்: ஒடிசா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்து 10 நோயாளிகள் உயிரிழப்பு

post image

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைத்து நோயாளிகளும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீ மளமளவென பரவியது. இதில் நோயாளிகளால் தப்பித்து செல்ல முடியவில்லை. தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நோயாளிகளை மீட்டனர். ஆனாலும் 10 நோயாளிகள் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இது தவிர மருத்துவமனை ஊழியர்கள் 11 பேரும், 7 நோயாளிகளும் காயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் முதல்வர் மோகன்

தீவிபத்தின் போது நோயாளிகளை காப்பாற்ற முயன்றதால் மருத்துவமனை ஊழியர்கள் காயம் அடைந்ததாக மாநில முதல்வர் மோகன் தெரிவித்தார். முதல்வர் மோகன் அமைச்சர்களுடன் சென்று தீவிபத்து நடந்த மருத்துவனையை பார்வையிட்டார். அதோடு காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 23 நோயாளிகள் மற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அவர்களை மாற்றும் போது 7 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் மாற்றிய பிறகு இறந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநில அரசால் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இத்தீவிபத்து நடந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாவலூர்: அதிகாலை நேர்ந்த கோரம்; சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலியான சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பு ஒன்றில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக அந்த வீடு முற்ற... மேலும் பார்க்க

கரூர்: கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்; 23 மாணவர்கள் காயம்; ஆளில்லாத லெவல் கிராசிங்கால் விபத்து

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 23... மேலும் பார்க்க

யானை - மனித எதிர்கொள்ளல்: வீட்டுக்கு சென்ற வழியில் சிக்கிய நண்பர்கள் - இருவரும் உயிரிழந்த சோகம்

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முக்கிய இடத்தில் இருக்கிறது. குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை - மனித எதிர்கொள்ளல்களின... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் பயங்கரம்: ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து; பயணம் செய்த 7 பேரின் நிலை என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் 7 பேருடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.41 வயது மதிக்கத்தக்க நோயாளி, விபத்து ஒன்றில் சிக்கி 63 சதவீத தீக்க... மேலும் பார்க்க

'மதுபோதையில் டிராக்டரை ஓட்டிய நபர்; ஆட்டுமந்தையில் மோதி 81 ஆடுகள் பலி' - திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ். இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந... மேலும் பார்க்க