செய்திகள் :

ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

post image

ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை.

ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே வருகிறது.

இன்னொரு பக்கம் எல்.பி.ஜி உள்ளிட்ட பல எரிசக்தி பிரச்னைகளை உலகம் சந்தித்து வருகிறது.

நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்

இந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசியுள்ளனர்.

அவர்கள், ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டால், வரும் வாரங்களில் உலக எரிசக்தி சந்தைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

அப்பாஸ் அரக்சி
அப்பாஸ் அரக்சி

தயாராக இல்லாத ஈரான்

தற்போதைய சூழலில், ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார். ஆனால், ஈரான் அதற்கு தயாராக இல்லை.

பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், "அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காரணம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்திய போது, நாங்கள் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தான் இருந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான். போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?

தவெக - NDA இடையே தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தவெக - NDA வுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அடித்து ... மேலும் பார்க்க

"விஜய்யை NDA கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினேனா?"- பவன் கல்யாண் விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என்ற நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையி... மேலும் பார்க்க

கோவில்பட்டி: `யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!' - வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் த.வெ.க இணைந்தால் தி.மு.கவுக்கு பாதிப்பா என்று ... மேலும் பார்க்க

`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!"- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்

தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “டெல்லி சிபிஐ விசாரணை தொடர்பாக தவெக தலைவர் விஜய் அவரது... மேலும் பார்க்க