150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொ...
எதிர்நீச்சல் தொடரில் ஸ்ரீஜா! கனிகா வெளியேறி 8 மாதம் கழித்து புதிய ஈஸ்வரி! தாமதத்துக்கு காரணம் என்ன?
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `எதிர்நீச்சல்'. முதல் சீசன் ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் 10 மணிக்கு மாற்றப்பட்டது.
முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைய, ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டருக்கு நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி வந்தார். இவரது மனைவியாக நடித்து வந்தார் நடிகை கனிகா.
இரண்டாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாகப்போய்க் கொண்டிருந்த சூழலில் கனிகா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின.
அப்போதே நாம் இது தொடர்பாக விசாரித்து 'எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து வெளியேறினார் கனிகா - பின்னணியில் நடந்தது என்ன?' என்கிற டைட்டிலில் விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டோம்.
பர்சனல் காரணங்களால் வெளியேறியதாகச் சிலரும், வெளிநாட்டில் செட்டில் ஆகப் போவதால் விலகினார் எனச் சிலரும் சொன்னார்கள்.
தொடரில் ஆதி குணசேகரன் கேரக்டருக்குத் தரப்படும் அளவுக்கு தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்படாததாலேயே வெளியேறினார் என்றும் சில தகவல்கள் றெக்கை கட்டின.
அவர் சீரியலில் இருந்து வெளியேறி விட்ட போதும், மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பது போலவே சுமார் எட்டு மாதங்கள் வரை காட்டி வந்தார்கள். ஆனால் கனிகாவே இந்த சீரியலில் இருந்து வெளியேறிய சூட்டோடு வேறொரு சேனலின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக போய் அமர்ந்து விட்டார்.
இது குறித்து நாம் கேட்டதற்கு அவரிடம் சமாதானம் பேசி திரும்பவும் அவரை சீரியலுக்குள் கொண்டுவரும் முயற்சி நடப்பதாகவவும் அதனாலேயே இப்படி காட்டப்பட்டு வருவதாகவும் சீரியலுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லையா எனத் தெரியவில்ல, தற்போது கனிகாவின் கேரக்டருக்கு புதிய ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆகி விட்டதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பொம்மலாட்டம்' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரிஜா கனிகாவுக்குப் பதில் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்க கமிட் செய்யப்பட்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளத் தொடங்கி விட்டாராம்.
எனவே ஸ்ரிஜாவை புதிய ஈஸ்வரியாக அடுத்த சில தினங்களிலிருந்து பார்க்கலாம் என்கிறார்கள்.!





















