செய்திகள் :

Trump: "ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும்" - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

post image

அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், "ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் உலக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், பெட்ரோல் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கத்தில் அமெரிக்கப் போர் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்று கூறிய ட்ரம்ப், தற்போது சுமார் ஏழு நாடுகளிடம் ராணுவ உதவி கோரியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஒருபுறம் ட்ரம்ப் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், மறுபுறம் பாரிஸ் நகரில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்கூட்டியே ஒரு சுமூகமான சூழலை உருவாக்கவே இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்திருந்த பேட்டியில், ``மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை உறுதி செய்ய நாங்கள் உருவாக்கும் புதிய கூட்டணியில் சீனா இணைய வேண்டும்.

எனது சீனப் பயணத்திற்கு முன்பாகவே அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், எனது பயணம் தள்ளிவைக்கப்படலாம்.

அமெரிக்கா Vs சீனா
அமெரிக்கா Vs சீனா

ட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கை குறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ``ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது. இப்பகுதியை அமைதியாக வைத்திருப்பது சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அமைதியை நிலைநாட்ட தொடர்புடைய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்" எனப் பொதுவாகக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே வர்த்தகப் போரினால் அமெரிக்கா - சீனா இடையே சுங்க வரி மோதல் நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி இலக்கைச் சீனா 4.5% - 5% ஆகக் குறைத்துள்ள நிலையில், எண்ணெய் விநியோகத் தடை நீடித்தால் அது சீனாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10

எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்!முதல் களம் 101989-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, சேலம் மாவட்டத்தின் ஒரு சிறிய ஊரிலிருந்து ஒருவர் தேர்தல் களத்தில் குதித்தார். அவர் பெயர் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

"தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திருப்பத்தூரில் நேற்று (மார்ச்.15) திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் பாஜகவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். பாஜக தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான். அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன.ஹார்முஸ் ஜலசந்தி வழியா... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான். போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?

தவெக - NDA இடையே தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தவெக - NDA வுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அடித்து ... மேலும் பார்க்க

ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை. ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர... மேலும் பார்க்க