``இந்தச் சூழல் வந்தால், அன்றே பாடுவதை நிறுத்திவிடுவேன்" - மனம் திறந்து பேசிய ஸ்ர...
ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான்.
அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலை விடவில்லை என்றால் தொடர் தாக்குதல் என்று ட்ரம்ப் எவ்வளவு சொல்லியும், ஈரான் கேட்பதாக இல்லை.

ட்ரம்ப் பதிவு
இந்த நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை அழைத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது...
"ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தும், பாதுகாப்பாகவும் வைக்கவும் போர் கப்பலை அனுப்பும்.
ஏற்கெனவே அமெரிக்கா ஈரானின் 100 சதவிகித ராணுவ சக்தியை அழித்துள்ளது. இருந்தும் ஈரான் டிரோன்களை அனுப்பியோ, ஏவுகணைகளை ஏவியும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
அதனால், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் காக்க கப்பல்களை அனுப்பும். அப்போது தான் ஈரான் அச்சுறுத்தலாக இருக்காது.
அதே சமயத்தில், ஹார்முஸ் ஜலசந்தி பாதை பாதுகாப்பாக மீண்டும் மாறும் வரை, அமெரிக்கா ஈரான் கடற்கரை ஓரத்திலும், ஈரான் கப்பல்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும்".
ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு எந்த நாடும் இன்னும் பதிலளிக்கவில்லை.















